முத்துலட்சுமியை எழுதச்சொன்ன பாரதி
அப்போது அந்தப் பெண்ணுக்கு இருபத்தொரு வயது. மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்திருந்த மாணவி. 1907இல் ஒரு நாள். சென்னை மயிலாப்பூரில் புகழ்பெற்ற மருத்துவர் நஞ்சுண்ட ராவ் இல்லம். அங்கே அன்றைக்கு வருகை தந்த பிரமுகரிடம் அந்த மாணவியை அறிமுகம் செய்துவைத்தார் நஞ்சுண்ட ராவ். அறிமுகம் ஆன மாணவியைத் தனது இதழுக்கு எழுதவும் தான் நடத்தும் கூட்டங்களில் பேசவும் அந்தப் பிரமுகர் அழைப்பு விடுத்தார். அடுத்த இருபது ஆண்டுகளில் அந்த மாணவி சென்னை மாகாணமே வியந்து போற்றும் புதுமைப் பெண் ஆனார். தமிழ்ச் சமூகத்தில் புதுமைப் பெண்கள் தோன்றக் கனவுகண்ட அவரோ தமிழ்மொழிக்கு வாய்த்த மகாகவியாகக் கொண்டாடப்பட்டார்.
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-310/IMG-20250919-WA0013.jpg" style="height:482px; width