விலங்குப் பண்ணை: 80 ஆண்டுகள் விலங்குகள் சொல்லும் அரசியல் பாடம்
ஜார்ஜ் ஓர்வெல்
பருத்திப் பாலும் தலப்பாகட்டி பிரியாணியும் ஒன்றுமுதல் பத்துவரை வரிசைப்படுத்தப்படுகின்ற இன்றைய மதிப்பீட்டுக் கலாச்சாரத்தில், நான் அடுத்து எழுதப்போகும் ஜார்ஜ் ஓர்வெல்லின் வாசகத்திற்கு பத்து அல்ல, மேலதிகமான மதிப்பெண் கிடைக்கும். அந்த வாசகம்: “எல்லா விலங்குகளும் சமம், ஆனால் சில விலங்குகள், மற்றவற்றைவிடக் கூடுதல் சமம்.”
இந்த வரி, விலங்குப் பண்ணை குறுநாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது. புரட்சியின் மகத்துவத்தில் நம்பிக்கை வைக்க மறுக்கும் பொதி சுமக்கும் புலமைமிகு கழுதை பெஞ்சமின். அது புரட்சி பற்றிக் கூறும் புத்திசாலித்தனமாகவும் சுருக்கமாகவும் கடிக்கக்கூடிய விமர்சனம் இது. பன்றிகளின் ஆட்சியை மெதுவாகச் சிதைக்கும் செயலின் உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது இந்த வரி. புரட்சியின் கனவுகள் எவ்வாறு அதிகாரத்தின் கீழ் மங