பெருமாள்முருகன் கவிதைகள்
ஓவியம்: ஏ. ராமச்சந்திரன்
முருங்கை
இந்த முருங்கையை
இவ்வளவு நேரம் இத்தனை நெருக்கம்
கூடிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
வெண்பூங்கொத்து நீட்டிச் சிரிக்கிறது
பாம்பின் பூங்குட்டியாய் விரல்பிஞ்சு அசைக்கிறது
அணிற்பிள்ளைக்கு வளைந்து ஊஞ்சலாடுகிறது
காகம் வந்தமரும் நேரம் தெரிகிறது
பழுக்கும் இலைகளுக்கு ஈடாகத் தளிர் இலைகள்
அரசுக்கு இயையும் குடிகளாய்
காற்றோடு எப்போதும் இணக்கம்
இருளில் நிழலே உருவம்
இருக்குமிடம் தெரியாது
ஒடிக்கும்போதும் பறிக்கும்போதும்
தலைவணங்கித் தருகிறது
முறிந்து அலறுகிறது
ஆனால் ஒன்றும் செய்வதில்லை
பிரும்ம விருட்சம் எனும் கர்வ