கடிதங்கள்
‘அயலாரையும் அரவணைக்கும் அரசியல்’ தலையங்கம் கருத்தியலாக மிகவும் சரியானதே. ஆனால் நடைமுறையில் நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. வடவர்களை இழிவுசெய்து ஒதுக்குவதை ஏற்க முடியாது. அதேசமயம் வடவரின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கத் தமிழரின் நலம் பாதிக்கப்படும் என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. இன்று தமிழ்நாட்டு முதலாளிகள் வடவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முதன்மையான காரணியாக இருக்கிறார்கள். தொழிலாளர் நலம் பேணும் அரசு அமையாதவரை இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவர முடியாது.
ஏ.பி. இராஜசேகரனின் ‘ஆணவக்கொலைகளின் உண்மை விலை’ கட்டுரை தரும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. சாதியின் பேரால் கொல்லப்பட்ட தலித்தின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி தலித்துக்களுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்தே வழங்கப்படுவது என்பது அச்சமூகத்திற்கு மேலும் தீமையே செய்கிறது. கட்டுரையாளர் சொல்வது போல் எதிர்காலத்தில் கொலை செய்தவரின் குடும்பச் சொத்திலிருந்தே இந்த நிதியை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அதுதான் எதிர்காலத்தில் சாதியின் பெயரால் கொலைசெய்ய நினைப்பவருக்குள் அச்சத்தை உருவாக்கும்.
சாரா அருளரசியின் ‘விலக்கப்பட்டோருக்கான கல்வி’ கட்டுரை சிறப்பாக இருக்கிறது. அரசு, ஆசிரியர், மாணவர் என மூன்று தரப்பாரின் தவறுகளைச் சுட்டுகிறது. குறிப்பாக ஆசிரியர்களின் மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.
சா.ரு. மணிவில்லன்
சென்னை-87
படைப்பாளர்கள் வாழும் காலத்திலேயே அவர்களைக் கௌரவப்படுத்தும் காலச்சுவடு அறக்கட்டளைப் பணி அர்த்தமுள்ள, ஆக்க பூர்வ இலக்கியத் தொண்டு. எழுத்துப் பணியில் பொன்விழா காணும் சுகுமாரனின் படைப்புப் பயணத்தை ஒரு கல்லூரியில், அதுவும் மாணவர்கள் முன்னால் அலசி, ஆராய்ந்தது இளைய தலைமுறைக்கு இலக்கிய எழுச்சியை ஏற்படுத்தக்கூடியது. 200 மாணவர்கள் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கை அலங்கரித்தார்கள் என்பது ஆச்சரிய ஆனந்தமென்றால் அவர்கள் அனைவருக்கும் காலச்சுவடு புத்தக விருந்து படைத்து வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தது பெருமிதத்திற்குரிய இதழியல் பெருமை. காலச்சுவடு பணி கல்லூரிகள்தோறும் தொடரட்டும்.
அண்ணா அன்பழகன்
அந்தணப்பேட்டை
செப்டம்பர் தலையங்கம், நமது இப்போதைய அரசியல் நிலவரத்தைத் தொட்டுக்காட்டி, சில குறிப்புகளை உணர்த்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்திருக்கும் பீகாரின் வாக்காளர் சீர்த்திருத்தக் குழப்படிகளும், அதற்குத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தையும் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்டிய தலையங்கம், தமது ஒரு பத்திக் கருத்தோடு இந்தப் பிரச்னையை நிறுத்திவிட்டதே! இதை, ராகுல் காந்தி சற்று உணர்ச்சிவசப்பட்டு அவரசப்பட்டுவிட்டார் என்று கூறவந்ததாக எடுத்துக்கொள்வதா? இல்லை, என்னதான் சீர்திருத்த முயற்சி என்றாலும், ஒரு மாநிலத்திலேயே பல லட்சம் வாக்காளர்களது ‘சுதந்திரமான வாக்குரிமை’ பல வழிகளில் குழப்பிவிடப்பட்டிருப்பதை எப்படி அவதானிப்பது என்ற சந்தேகத்தின் குறியீடு என்று எடுத்துக்கொள்வதா?
இருப்பினும், தமது தார்மீக உரிமைகளுக்காகப் பல ஒன்றிய அரசுகளிடம் ஆண்டாண்டுக் காலமாகப் போர்க்கொடி உயர்த்தத் தவறாத தமிழகம், பல வருடங்களாகத் தம்மிடம் வந்து கிடைக்கும் பல்வேறு பணிகளையும் செய்துவரும் ஆயிரக்கணக்கான பிறமாநிலத் தொழிலாளர்களுக்கு எவ்வித அசம்பாவித்தையோ, வெறுப்புணர்வவையோ ஏற்படுத்தியதில்லை’ என்பதைத் தலையங்கத்தின் ‘அயலாரையும் அரவணைக்கும் அரசியல்’ தலைப்பு அருமையாக விளக்கி நிற்கிறது.
இதே இதழில், இன்றைய மனித சமூகத்தின் மாண்பை ஈனப்படுத்தி வரும் சாதிய ஆணவக் கொலைகள் பற்றியும், சாதி வன்முறையில் இளைய தலைமுறையினர் என்பது பற்றியும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய கொடிய நிகழ்வுகளிலிருந்து, ஒரு சில மிகத் தெளிவான உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன:
சி. பாலையா
புதுக்கோட்டை