‘அன்புள்ள வசந்தகுமார்’ சு.ரா. கடிதங்கள்
ஓவியம்: ஆதிமூலம்
1987, ஜனவரி முதல் 1988 வரை இரண்டு இதழ்கள் மட்டுமே வெளியான ‘புதுயுகம் பிறக்கிறது’ இதழின் ஆசிரியர் வசந்தகுமாருக்கு (தற்போது ‘தமிழினி’ பதிப்பாளர்) சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளன. இதழியலின் பங்கு, அதன் ஆற்றல், வீச்சு ஆகியவை குறித்த சு.ரா.வின் பார்வைகளை இக்கடிதங்களின் வழியாக அறியலாம்.
- பொறுப்பாசிரியர்
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்,
15.2.1986.
அன்புள்ள வசந்தகுமார்,
உங்கள் கடிதம்.
என் கதை கட்டுரைகளை பிரசுரிக்க முடியாமற் போனதையோ என் கவித