பிணை மறுப்பு: நீதியின் வன்முறை
2019 - 2020ஆம் ஆண்டுகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான உமர் காலித் உள்ளிட்ட ஒன்பது பேரின் பிணை மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான உமர் காலித்தும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார்கள். ஏறத்தாழ 2000 நாட்கள். இந்த வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், மீரான் ஹைதர், குல்பிஷா ஃபாத்திமா, ஷிஃபா உர் ரஹ்மான் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக, தில்லி காவல் துறைக்கு செப்டம்பர் 22 அன்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.
தில்லி காவல் துறையினர், 2020 பிப்ரவரியில் தலைநகரில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறைக்குப் பின்னால் சதித்திட்டம் இருந்ததாகக் கூறி இந்த ஒன்பது பேரையும் கைதுசெய்தனர். அரசின் கணக்கின்படி, அந்த வன்முறைய