அறப்பணிக்கு டெட் தேர்வா?
2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009இன்படி, 1முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களும் 6முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் சொல்லித்தரும் பட்டதாரி ஆசிரியர்களும் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, இத்தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்கள் இத்தேர்வினை எழுத வேண்டிய அவசியமில்லையென்று அரசு உறுதி கூறியிருந்தது. ஆனால் அண்மையில் வந்த தீர்ப்பில் முன்னரே நியமிக்கப்பட்டுப் பணியிலுள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியுமென்றும் இல்லையெனில் கட்டாய ஓய்வில் செல்லலாமென்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு, தமிழகத்தில் தற்போது பணியிலுள்ள 1.75 லட்சம் ஆசிரியர்கள், தேர்வெழுதித் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு ஆதரவான நிலையெடுத்திருப்பதுடன