அடிப்படைவாதத்துக்கு உரம்சேர்க்கும் மௌனம்
‘இந்தி சினிமாவில் உருது’ என்ற தலைப்பில் மேற்கு வங்காள உருது அகாடமி 2025, ஆகஸ்ட் 31முதல் செப்டம்பர் 3வரை கருத்தரங்கம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்வை அகாடமி ரத்து செய்தது. “தவிர்க்க முடியாத காரணங்களால்” இது ஒத்திவைக்கப்படுவதாக அகாடமியின் உறுப்பினர் செயலாளர் நஸ்ஹத் ஜைனப் தன்னுடைய அதிகாரப்பூர்வமான அறிக்கையில் தெரிவித்தார்.
“தவிர்க்க முடியாத காரணம்” இதுதான்: நிகழ்ச்சியில் பிரபல திரைப்படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கலந்துகொள்வதாக இருந்தது. அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. “ஜாவேத் அக்தர் இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களையும், அவற்றின் கடவுள்களையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று நிகழ்ச்சியை எதிர்த்த குழுக்களில் ஒன்றான ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் குற்றம் சாட்டியது. வஹ்யாஹின் ஃபவுண்டேஷன் என்னும் குழுவும் இந்நிகழ்ச்சியை எதிர்த்தது. “அவர் நாத்திகராக இருக்கலாம், அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், மற்றவர்களின் மதங்களை இழிவுபடுத்த அவருக்கு உரிமை இல்லை.