சூத்திரங்கள் மாறலாம் விழுமியங்கள் மாறாது
கோவையில் நவீன இலக்கியம் தொடர்பான கூட்டங்கள் 1970களில் கி. பழனிச்சாமி என்று அழைக்கப்பட்ட ஞானியின் முன்னெடுப்பில் நடந்தன. தமிழ்ப் பண்பாட்டு வெளியில் மீசையை முறுக்கிக்கொண்டிருந்த எல்லா ஆளுமைகளையும் கோவைக்குக் கொண்டுவந்து ஒன்று தனித்தமிழ்க் கருக்கரிவாள் அல்லது மார்க்சியப் போர்வாளால் குத்திக் குதறுவது அவர் வழக்கம். இது நடக்கும்போது அவரைச் சுற்றியிருக்கும் தமிழாசிரியர்கள் ஜோராகக் கை தட்டுவார்கள். மார்க்சியவாதிகள் (பெரும்பாலும் தொழிற்சங்கச் சார்புடையவர்கள்) அடுத்த குதறுதலுக்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு கூட்டத்திற்கு சுந்தர ராமசாமி அழைக்கப்பட்டிருந்தார்.
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-31