சிற்றுடுக்கையின் பேரொலி
இரவோடி
(நாவல்)
என். ஸ்ரீராம்
பரிசல் புத்தக நிலையம்
பம்மல், சென்னை&75
தொடர்புக்கு: 93828 53646
ரூ. 700
என். ஸ்ரீராமின் படைப்புச் செயல்பாட்டில் ‘இரவோடி’ ஒரு முக்கியமான நாவல். இந்நாவலில் புனையப்பட்டிருக்கும் கதை தமிழிற்குப் புதிது. மானிடவியலாளர்களின் நூல்களில் தரவுகளாக மட்டுமே இடம்பெற்றிருந்த சாமக்கோடாங்கிகளின் வாழ்க்கையைப் புனைவாக எழுதியிருக்கிறார். ஸ்ரீராமின் பெரியப்பா, எழுபதுகளின் இறுதியில் சொன்ன சாமக்கோடாங்கிபற்றிய உண்மைச் சம்பவம்தான் இந்நாவலுக்கான கதைக்கரு. ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நினைவுச் சூழலில் சிக்கிக்கொண்டிருந்த அந்தச் சம்பவம் தற்போதுதான் புனைவாகத் திரண்டு வந்திருக்கிறது.