பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்
1990 களின் தொடக்கத்தில் பெருமாள்முருகன் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புலகை எடுத்துக்கொண்டபோது சுராவுடன் அவருக்கு கடிதப் போக்குவரத்துத் தொடங்கியது. சுராவின், ‘ஷண்முகசுந்தரத்தின் கிராமங்கள் (1977)’ கட்டுரை அவருக்கு ஆய்வில் ஊக்கமளித்திருக்கிறது என்பதை அக்கடிதங்களிலிருந்து உணர்ந்து கொண்டேன். சு.ரா.வுக்கு வரும் கடிதங்கள், அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தையும் படிப்பேன், பல கேள்விகள் கேட்பேன். சமகாலத் தமிழ்ப் பண்பாடு பற்றிய கல்வியாக எனக்கு அது இருந்தது. அப்படித்தான் பெருமாள்முருகனுடன் எனக்கு முதல் அறிமுகம். என்னுடைய திருமணத்திலும் அதற்கு முன் குற்றாலம் பட்டறையிலும் சந்தித்தேன் என்றாலும் அவை என் மனதில் அழுத்தமாகப் பதியவில்லை. பெருமாள்முருகனை அப்போது நான் படித்திருக்கவில்லை என்பதும் காரணம். காலச்சுவடு இதழைத் தொடங்கிய காலத்தில் அவரது எழுத்துக்களைப் படித்துவிட்டு, ‘இவர் நம்முடன் பயணிக்க வேண்டியவர்’ என்று எண்ணி அவருக்குக் கடிதம் எழுதிச் சேலத்தில் சந்தித்தேன். ஆண்டு 1998 ஆக இருக்கலாம். தொடந்து காலச்சுவடில