விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலில் தலித் மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின்னர் காவல்துறையின் பெரும் பாதுகாப்புடன் அம்மக்கள் சென்று வழிபட்டார்கள். அதற்கு அக்கிராமத்தில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்த
‘இரும்பின் தொன்மை: அரசியல் குழியில் அகழாய்வு’ என்ற கட்டுரையை பி.ஏ. கிருஷ்ணன் காலச்சுவடு மார்ச் 2025 இதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரை இரும்பின் தொன்மை பற்றிய அறிக்கையைக் கடுமையாக விமர்சிப்பதோடு அறிவியல் நெறியில் செய்யப்பட்ட அகழாய்வுகளை அரசியல் குழிக்குள் தள்ளுகின்றது. அரசியல் குழ
படங்கள்: கவாஸ்கர், வெண்புறா இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு கடந்த ஏப்ரல் 2முதல் 6வரை ஐந்து நாட்கள் மதுரையில் நடைபெற்று முடிந்தது. 1952இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. 1948முதல் 1951வரை கம்யூனிஸ்ட் கட
எண்ணம் வரைகலை: மு. மகேஷ் பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டின் இறுதித் தொடங்கிச் சில மாதங்கள் வரை, அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மனோநிலை உருவாக்கம் சார்ந்து பல நிகழ்வுகள் நடப்பதை அண்மைக்காலமாக இதழ்களில் கவனிக்க முடிகிறது. அதிகரித்து வரும் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை விகிதத்தைக் குறை
“எழுத்து என்பது ஒரு பொறுப்பு. முதலில் இது எனக்குத் தெரியவில்லை. விளையாடிக்கொண்டே வளர்வதுபோல நான் எழுதிக்கொண்டே வளர்ந்திருந்தேன். ஆனால் எழுத்துக்கு ஒரு மரபு உள்ளது. நானும் இந்த மரபினூடே மிதந்திருக்கவே முயன்றேன். சிலர் இதில் நீந்தக் கற்றிருந்தனர். எழுதுவது எனக்குத் தினசரிக் காரியங்களைப் போலப் பழ
தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்க வேண்டும் தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்க வேண்டும் அவசரத்துக்குக்கூடத் திரும்ப முடியாத் தொலைவிலிருந்து உன் வீட்டை நீ காண வேண்டும் எப்போதேனும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத தொலைவுக்குப் போய்விட வேண்டும் ஏழு கடல் தாண்டிச் செல்ல வேண்டும் போகு
1990 களின் தொடக்கத்தில் பெருமாள்முருகன் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புலகை எடுத்துக்கொண்டபோது சுராவுடன் அவருக்கு கடிதப் போக்குவரத்துத் தொடங்கியது. சுராவின், ‘ஷண்முகசுந்தரத்தின் கிராமங்கள் (1977)’ கட்டுரை அவருக்கு ஆய்வில் ஊக்கமளித்திருக்கிறது என்பதை அக்கடிதங்கள
நெதர்லாந்தின் ஹ்ரோனிகன் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழிவாற்றுவதற்காக கணநாத் ஒபயசேகர வந்திருந்தார். 1989இன் தொடக்கக் காலம் என்று நினைவு. ஆய்வுச் சிறப்பும் அங்கதச் சுவையும் மிக்க செறிவான சொற்பொழிவை அவர் வழங்கினார். பிற்பாடு அவருடன் அறிமுகமாகிச் சில மணிநேரம் உரையாட முடிந்தது. என்னுடைய துறை சமூகவிய
பத்தினித் தெய்வ வழிபாடு ‘த கல்ட் ஓஃப் கோடஸ் பத்தினி’ (The cult of Goddess Pattini) என்ற பெயரில் 629 பக்கங்கள்கொண்ட பெருநூலை மானிடவியலாளர் கணநாத் ஒபயசேகர 1984ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூல் சிக்காகோ பல்கலைக்கழக வெளியீடாக அமைந்தது. அவ்வேளை அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறை
எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியவை காமிக்ஸ் புத்தகங்களே. இன்றைக்கும் இரும்புக்கை மாயாவியை விரும்பிப் படிக்கிறேன். அதனை வெளியிட்டவர், நிறுவனர் சௌந்திர பாண்டியன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைப் பகிர்ந்துகொள்கிறேன். சௌந்திரபாண்டியனை மூன்று முறை சிவகாசியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
ஓவியம்: ரவி பேலட் வால்மீகியும் கம்பனும் முதன்முதலில் சாலையோரத் தேநீரகத்தில் சந்தித்துக்கொண்டனர். அந்தியின் குளுமை அவர்கள் உடலின்மீது நடுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் காரசாரமாய் வெங்காயத்தின் விலை ஏற்றத்தையும் புடலங்காயின் வளைவையும் பற்றி நான்கரை நாழிகை உரையாடினர். இறுதியில் கட்டியணைத்து விடைபெ
2010ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் மரியோ வர்கஸ் யோசா இவ்வாறு குறிப்பிட்டார்: ‘இலக்கியத்தால் யதார்த்தத்தை மாற்ற முடியும். ஏனெனில் அது குழப்பங்களைக் கலைத்துப்போடுகிறது. அசிங்கத்தை அழகாக்குகிறது. கணப்பொழுதை நிரந்தரமாக்குகிறது. மரணத்தைக் கடந்து செல்லு
முதலில் சாரா வின்-வில்லியம்ஸ் எழுதிய ‘கேர்லஸ் பீப்பிள்: ஸ்டோரி ஃஒஃப் வேர் ஐ யூஸ்ட் டூ வேர்க்’ (‘Careless People: A story of where I used to work’) நூலின் தலைப்பு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைச் சொல்லிவிடுகிறேன். இந்த வரிகள் எப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் ‘தி கி
நண்பர் எம்.ஏ. நுஃமான் முக்கியமான தமிழ்க் கவிஞர், முன்மாதிரியான இலக்கிய விமர்சகர், ஆற்றல் மிக்க மொழியியலாளர், மெச்சத்தக்க மொழிபெயர்ப்பாளர், மதிப்புக்குரிய பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வாளருங்கூட. நுஃமானின் பல்வேறு பக்கங்களையும் ஒருவர் முழுமையாக அறிய வாய்ப்பில்லை. எனினும் நுஃமானை அறிய வேண்டின் அவ
சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்களைப் பேசும் வடிவவியல் (Geometry) என்ற பகுதியை நாம் பள்ளிக் கணிதப் பாடத்தில் படித்திருக்கிறோம். கவை (divider), கவராயம் (compasses), பாகைமானி (protractor), மூலை மட்டங்கள் (set squares), அளவுகோல்கள் (scales) ஆகிய கருவிகளைக்கொண்டு கோடுகள், கோணங்கள், சதுரங
படம்: ஜவஹர் ஜி. எழுத்தாளரும் இதழாளரும் மொழி பெயர்ப்பாளருமான அரவிந்தனுக்கு 60 வயது நிறைவடைந்ததை யொட்டி ‘நெய்தல்’ இலக்கிய அமைப்பு ‘அரவிந்தன் 60’ நிகழ்ச்சியை நாகர்கோவிலில் கடந்த மார்ச் 22 அன்று மாலை நடத்தியது. 1989ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் நெய்தல் அமைப்பு 2006 இ
வெண்ணிலா கபடிக் குழு (2009) ஜெயமோகனின் ‘எழுகதிர்’ என்கிற சிறுகதையில் சோழர்காலக் கோயிலொன்றிலிருந்து ‘அருணபிந்து’ என்கிற வைரக்கல்லை இரண்டு நபர்கள் திருடிச் செல்வார்கள். அருணபிந்து தன் வழியைத் தானே தீர்மானிப்பது. தன்னை வைத்திருப்பவர்களைக் கிழக்கு நோக்கி வழிநடத்திச் செல்லு
மு. அருணாசலம் (1909-1992) ‘ஒரு பல்கலைக்கழகத்தில் பலதுறை அறிஞர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அறிஞர் ஒருவருக்குள்ளே ஒரு பல்கலைக்கழகமே இருந்தது உண்டா? அப்படி அறிஞர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி இருந்தவர் தான் மு. அருணாசலம் என்பார் பேரா.தெ. ஞானசுந்தரம். இது மிகையான கூற
மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன் மு, இக்பால் முகமது வெளியீடு: பரிசல் புத்தக நிலையம் 47, BI பிளாட், தாமோதர் பிளாட் ஐஸ்வர்யா அப்பார்ட்மெண்ட் முதல் தளம், ஓம் பராசக்தி தெரு, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை - 600 075 பக். 276 ரூ. 350 சென்னையில் திரைப்படத் தொழில் தொடங்கி அறுபது ஆண்ட
நீல பத்மநாபன் கவிதைகள் (சம்பூர்ணம்) வெளியீடு: விருட்சம் சீத்தா லட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், புதிய எண் 16, பழைய எண் 7, ராகவன் காலணி, மேற்கு மாம்பலம் சென்னை - 600 033 பக். 472 ரூ. 600 நாவலாசிரியராகவே அதிகம் அறியப்பட்ட நீல. பத்மநாபன் ‘தலைமுறைகள்’, ‘பள்ளிகொண்டபுரம்&
பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் பாலேந்திரா வெளியீடு: குமரன் புத்தக இல்லம் இல.14, அண்ணா 2ஆம் தெரு, தேரோடும் வீதி, திருவேற்காடு, சென்னை - 600 077 பக். 276 ரூ. 350 இலங்கையின் பிரதான நாடகக் கலைஞரும், தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் நிறுவனரும், இலங்கை யிலும் புலம்பெயர்
-
கட்டுரைகதைமதிப்புரைகள்நுண்கதைகள்கற்றனைத்தூறும்-6மீள்பதிவுபதிவுதிரைகடிதங்கள்எதிர்வினைஅஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)மதிப்புரைஅஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)கவிதைகள்தலையங்கம்அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (1930-2025)