தாத்தா
ஓவியம்: வான்கோ
ஒவ்வொரு முறை தோட்டத்தின் பின்புறம் சுள்ளிகள் நொறுங்கும்போதும், தவளை கத்தும் ஓசை எழும்போதும், சமையலறை ஜன்னல் கண்ணாடிகள் அடித்துக்கொள்ளும்போதும், சமதளப் பாறை ஒன்றின் மீது அமைத்திருந்த தனது தற்காலிக இருக்கையிலிருந்து துள்ளி எழுந்து இலைகளினிடையே பதற்றத்துடன் எட்டிப் பார்த்தார் அந்த முதியவர். ஆனால் அந்தச் சிறுவன் இன்னும் வந்திருக்கவில்லை. கொடிகள் படர்ந்த பந்தலை நோக்கித் திறந்திருக்கும் உணவு அறையின் ஜன்னல்கள் வழியாகச் சிறிது நேரத்திற்கு முன்பு ஒளிரவிடப்பட்ட அலங்கார விளக்கின் ஒளிக்கற்றைகளைக் கண்டார். அதன் கீழே திரைச்சீலைகளுடன் ஒரு பக்கத்திலிருந்து இன்னோர் பக்கத்திற்கு ஊர்ந்து செல்லும் நிழல்களைப் பார்த்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கிட்டப்பார்வை என்பதால், அவர்கள் ஏற்கெனவே சாப்பிட ஆரம்