‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’
“எழுத்து என்பது ஒரு பொறுப்பு. முதலில் இது எனக்குத் தெரியவில்லை. விளையாடிக்கொண்டே வளர்வதுபோல நான் எழுதிக்கொண்டே வளர்ந்திருந்தேன். ஆனால் எழுத்துக்கு ஒரு மரபு உள்ளது. நானும் இந்த மரபினூடே மிதந்திருக்கவே முயன்றேன். சிலர் இதில் நீந்தக் கற்றிருந்தனர். எழுதுவது எனக்குத் தினசரிக் காரியங்களைப் போலப் பழக்கமாகிவிட்டது. எழுத்து எப்போதுமே செய்து முடிக்காத ஒரு காரியம்தான். இத்தனை ஆண்டுகளாக எழுதியபோதும் எழுத்துக் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு எழுத்தாளனாக முன்னர் சந்தித்த சவால்களையே இப்போதும் சந்திக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எழுதுவது என்பது எழுத முயல்வதுதான்.”
விநோத் குமார் சுக்லவுக்கு வயது 88. கண் பார்வை மங்கிவிட்டது. ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், தீவிர சிகிச்சைப் பிரிவிலும்கூட சுக்லா எழுதுவதை நிறுத்தவில்லை. தினமும் தொடர்ந்து எழுதுகிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்தகாவ் என்ற சிறிய ஊரில் 1937ஆம் ஆண்டு பிறந்தார் வினோத் குமார் சுக்ல. அதே ஊரில் பள்ளிப்படி