அவர்கள் கவனக்குறைவானவர்கள்
முதலில் சாரா வின்-வில்லியம்ஸ் எழுதிய ‘கேர்லஸ் பீப்பிள்: ஸ்டோரி ஃஒஃப் வேர் ஐ யூஸ்ட் டூ வேர்க்’ (‘Careless People: A story of where I used to work’) நூலின் தலைப்பு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைச் சொல்லிவிடுகிறேன். இந்த வரிகள் எப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் ‘தி கிரேட் கேட்ஸ்பி’ (The Great Gatsby) என்ற நாவலில் வருபவை. ஜே கேட்ஸ்பி என்ற பணக்காரரின் மர்மமான வாழ்க்கையையும், மாயை, செல்வம் ஆகியவற்றுடன்அமெரிக்கக் கனவின் வீழ்ச்சியையும் இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. இதோ அந்த வசனம்: “அவர்கள் பொருட்களையும் உயிரினங்களையும் சிதைத்துவிட்டு, தங்கள் பணத்திலோ பரந்த கவனக்குறைவிலோ—அல்லது வேறெதிலோ தஞ்சம் புகுந்துவிடுவார்கள்; ஆனால் அவ