மறுபக்கம்
ஓவியம்: ரவி பேலட்
“அம்மா இந்தாப் போன் வந்துருச்சு பேசுங்க…” பதற்றத்துடன் கோகிலாம்மா நீட்டியபோது நான் வெண்டைக்காயை அளவு மாறாமல் வெட்டிக்கொண்டிருந்தேன்.
வெட்டுவதை நிறுத்திவிட்டு “நீங்களே பேசுங்க என் கை பிசுபிசுப்பா இருக்கு,” என்றேன் .
“சரிங்கம்மா,” என்றபடி கோகிலாம்மா பேசினார்.
“சொல்லுமா, என்னம்மா ஆச்சு” என்று கேட்க மறுமுனையில் அந்தப் பெண் ஏதோ சொன்னாள்.
“பயப்படாதம்மா, நான் இங்கே ஒருத்தவங்க கிட்ட உதவி கேட்டு வந்திருக்கேன். ஒண்ணும் இல்ல கண்ணு. அவங்க கிட்டயே பேசு.”
போனை என்னிடம் நீட்டி அவரின் கண்கள் கெஞ்சின.
நானும் வேறு வழியில்லாமல் அந்தப் பழைய பட்டன் போனை வலது கையில் வாங்கிக் காதில் வைத்தேன்.
<