கவராயம் கவிப்பொருள் ஆனதென்னே!
சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்களைப் பேசும் வடிவவியல் (Geometry) என்ற பகுதியை நாம் பள்ளிக் கணிதப் பாடத்தில் படித்திருக்கிறோம். கவை (divider), கவராயம் (compasses), பாகைமானி (protractor), மூலை மட்டங்கள் (set squares), அளவுகோல்கள் (scales) ஆகிய கருவிகளைக்கொண்டு கோடுகள், கோணங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், வட்டங்கள் எனப் பல வடிவங்களை வரைந்து வரைந்து பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் பின்னாளில், காதல் கவிதையாக்கக் கற்பனையில், கவராயம் (compasses) என்ற வடிவவியல் கருவியை ஒப்புமை காட்டிப் பேச, நாமோ பிறரோ எப்போதாகிலும், எவ்வகையாகிலும் எண்ணியிருப்போமா? பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜான் டன் என்ற ஆங்கிலக் கவிஞர் அதைச் செய்துகாட்டினார். கவராயத்தை ஒப்புமை காட்டிப் புகழ்பெற்ற ‘A Valediction: Forbidding Mourning’ (1633) என்ற காதல் கவிதையை எழுதினார். அதிலிருந்து சில வரிகள்:
Our two souls therefore, which are one,
………………………………&