தலித் சினிமா: நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்
வெண்ணிலா கபடிக் குழு (2009)
ஜெயமோகனின் ‘எழுகதிர்’ என்கிற சிறுகதையில் சோழர்காலக் கோயிலொன்றிலிருந்து ‘அருணபிந்து’ என்கிற வைரக்கல்லை இரண்டு நபர்கள் திருடிச் செல்வார்கள். அருணபிந்து தன் வழியைத் தானே தீர்மானிப்பது. தன்னை வைத்திருப்பவர்களைக் கிழக்கு நோக்கி வழிநடத்திச் செல்லும் குணமுடையது. அப்படித் தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நூறாண்டுகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ‘கருத்து – இயக்கம்’ அருணபிந்துவாக இருந்துள்ளது. அதை அடியொற்றித் தமிழ்த் திரைப்பட இயக்கம் முன்னகர்ந்துள்ளது. அது ஏறக்குறைய அந்தந்தக் காலகட்டத் தமிழ்நாட்டின் வரலாறாகவும் இருந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தை ஒட்டி உணர்வுப்பூர்வமான நாடகங்கள் திரைப்படங்களாயின. பக்திப் படங்கள் ஒரு காலத்தை நிறைத்தன. திராவிட இயக்கம் மேலெழுந்து