செங்கொடி இயக்கத்தின் திசைவழி
படங்கள்: கவாஸ்கர், வெண்புறா
இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு கடந்த ஏப்ரல் 2முதல் 6வரை ஐந்து நாட்கள் மதுரையில் நடைபெற்று முடிந்தது. 1952இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. 1948முதல் 1951வரை கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. தடை நீக்கப்பட்ட உடன் நடைபெற்ற மாநாடு என்கிற முக்கியத்துவம் அம்மாநாட்டுக்கு இருந்தது. மீண்டும் அதே மதுரையில் 1972ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இது மூன்றாவது முறை.
மார்க்சிஸ்ட் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு அகில இந்திய மாநாடுதான். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளை மாநாடுகளில் தொடங்கி மாவட்ட, மாநில மாநாடுகளை நடத்தி அகில இந்திய மாநாட்டுக