விநோத் குமார் சுக்ல
தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்க வேண்டும்
தொலைவிலிருந்து வீட்டைப் பார்க்க வேண்டும்
அவசரத்துக்குக்கூடத் திரும்ப முடியாத் தொலைவிலிருந்து
உன் வீட்டை நீ காண வேண்டும்
எப்போதேனும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லாத
தொலைவுக்குப் போய்விட வேண்டும்
ஏழு கடல் தாண்டிச் செல்ல வேண்டும்
போகும்போதே திரும்பித் திரும்பிப் பார்க்க வேண்டும்
இன்னொரு தேசத்திலிருந்து உன்னுடைய தேசத்தை
ஆகாயத்திலிருந்து உன்னுடைய பூமியை
வீட்டில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்ற நினைப்பு
அப்போது பூமியில் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதாகிவிடும்
வீட்டில் உண்ண உணவும் பருக நீரும் இருக்குமோ என்ற கவலை
பூமியில் உணவும் நீரும் உண்டோ என்ற கவலை ஆகும்
பூமியில் பசித்திருக்கும் யாரோ ஒருவர்
வீட்டில் பசித்திருப்பவராகிவிடுவார்
மேலும் பூமிக்குத் திரும்புவதென்பது
வீட்டுக்குத் திரும்புவது போலாகிவிடும்.
வீட்டுக் கண