வாழிய நிலனே!
எண்ணம் வரைகலை: மு. மகேஷ்
பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டின் இறுதித் தொடங்கிச் சில மாதங்கள் வரை, அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மனோநிலை உருவாக்கம் சார்ந்து பல நிகழ்வுகள் நடப்பதை அண்மைக்காலமாக இதழ்களில் கவனிக்க முடிகிறது. அதிகரித்து வரும் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை விகிதத்தைக் குறைப்பதற்காகத் தனியார்ப் பள்ளிகளின் சதி என்றும் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து போயிருப்பதன் காரணமே இத்தகைய நிகழ்வுகள் என்றும் இன்னும் பல காரணங்களைப் பலரும் அடுக்குகிறார்கள்.
பள்ளியின் சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்துவது, மாணவர்கள் பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சண்டையிடுவது, குடிப்பது, ஆசிரியர், மாணவர் சார்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறுகின்றன என்பது போன்ற தோற்றத்தை ஊட