பண்பாட்டு வேர்களைத் தேடுதல்
பத்தினித் தெய்வ வழிபாடு ‘த கல்ட் ஓஃப் கோடஸ் பத்தினி’ (The cult of Goddess Pattini) என்ற பெயரில் 629 பக்கங்கள்கொண்ட பெருநூலை மானிடவியலாளர் கணநாத் ஒபயசேகர 1984ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூல் சிக்காகோ பல்கலைக்கழக வெளியீடாக அமைந்தது. அவ்வேளை அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தார். இலங்கையின் மேற்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் சிங்களவர் மத்தியிலும் கிழக்கு மாகாணத் தமிழர்களிடையேயும் பெருவழக்காக இருக்கும் இவ்வழிபாடுபற்றி அவர் விரிவான கள ஆய்வுகளைச் செய்தார். ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் படித்துப் பட்டம் பெற்ற கணநாத் ஒபயசேகர மானிடவியல் துறையில் தீவிர அக்கறையோடு ஈடுபடத் தொடங்கினார். இந்நூலின் நூன்முகத்தில் அவர் கூறியிருப்பவை அவரின் புலமை ஆளுமையின் குண இயல்புகளை நன்கு விளங்கிக்கொள்ள உதவக்கூடியன.
“1955ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாக நான் வெளிவந்தேன். பேராதனையில் நான் படித்த காலத்தில் எனது தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் பலரைப் போன்று, எனது தனிநபர் அடையாளம் யாது, சமூக அடையாளம் யாது என்பனபற்றி அறிந்துகொள்ள ஆவல் க