சுஜித் லெனின் நுண்கதைகள்
ஓவியம்: ரவி பேலட்
வால்மீகியும் கம்பனும் முதன்முதலில் சாலையோரத் தேநீரகத்தில் சந்தித்துக்கொண்டனர். அந்தியின் குளுமை அவர்கள் உடலின்மீது நடுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் காரசாரமாய் வெங்காயத்தின் விலை ஏற்றத்தையும் புடலங்காயின் வளைவையும் பற்றி நான்கரை நாழிகை உரையாடினர். இறுதியில் கட்டியணைத்து விடைபெறும்வரை மறந்தும்கூட ‘ராமாயணம்’பற்றிப் பேசிக்கொள்ளவில்லை.
ஒரு ஊர்ல ஒரு ஆறு இருந்துச்சாம். ம்ம்ம் என்று இராகமிழுக்கிறாள்.
ஆத்தோரத்துல ஒரு கொடுக்காப்புளி மரம் இருந்துச்சாம். ம்ம்ம்...
இராகமிழுக்கிறாள். அதுல இருந்த கொடுக்