ஏதுமற்ற பெண்களே எளிதான இலக்கு
Courtesy: vecteezy silhouette of woman harassment vector
illustration hands
2008 காலகட்டத்தில் பெங்களூரு தேசிய நாடகப் பள்ளி சார்பில் நாடகப் பிரதி உருவாக்கப் பயிற்சிப் பட்டறை ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டறையில் பங்குகொண்டவர்கள் நாடகச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் ஆளுமைகள்; கற்றவர்கள்; வயதிலும் பெரியவர்கள்; அப்போது அவர்களுக்கு மத்தியில் நான் சிறு பெண். இந்தத் துறை பற்றிய அறிவு எனக்கு அப்போது அதிகமில்லை. என்னோடு அங்கு கலந்துகொண்டவர்கள் நிறைய வருடங்களாகவே இந்தத் துறையில் ஈடுபாட்டுடன் இருப்பவர்கள். அந்தப் பத்து நாள் பயிற்சியில்தான் முதன் முதலில் பார்த்திபராஜா என்ற அந்த நாடகக்காரரைப் பார்த்தேன்.
அவரது பேச்சு, புத்தக வாசிப்பு, எழுத்த