பிம்பம் - அதிகாரம் - அத்துமீறல்
புஜ்ஜி எவ்வளவு அருமையான பெண்! அவள் ஏன் அந்த ‘எழுத்தாளனை’த் தேர்ந்தெடுத்தாள்? பருவத்தில், பிழைப்புக்கு அச்சுக்கோக்கும் நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்டவளுக்குக்கூட அந்த ‘எழுத்தாளனை’ச் சுற்றி எப்படிக் கனவுகள் படர்ந்தன? யார் அந்தக் கனவைப் பரப்பினார்கள்? நம் கலையுலகில் கனவை விற்றுப் பிழைப்பவர்களுக்கும் இதில் பங்கு இல்லையா? இப்படிப் பார்க்கும்போதுதான் இது எவ்வளவு கொடுமையான விஷயம் என்று தெரிகிறது.
- சுந்தர ராமசாமி (வண்ணதாசன் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில்)
பாலியல் குற்றங்களைப் பெரும்பாலான சமயங்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல் போவது தவறு இழைப்பவர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. ஆதாரம் கொடுக்க முடியாததாலேயே குற்றம்சாட்டுபவர்கள் பொய் சொல்