இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு அரசியலின் குறியீடு
சத்தியவாணி முத்து (1923 - 2023)
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு அரசியலின் குறியீடு
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அரசியல் வரலாற்றில் பெண் ஆளுமைகள் அரிதாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் சத்தியவாணி முத்து. அவருக்கு இது நூற்றாண்டு (1923-2023). அவரைப் போன்றோரைப் பேசுவதற்கு நூற்றாண்டு போன்ற ‘அடையாள நாட்கள்’ வேண்டியிருக்கிறது. சத்தியவாணி முத்து அறிந்துகொள்ளப்பட வேண்டிய ஆளுமை; அவரை அறிந்துகொள்வதன்வழி தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நடந்து வந்த மாற்றங்களையும் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் அவரின் அரசியல் வாழ்க்கை ஒரு குறியீடு ஆ