தலையங்கம்

வலிமையற்ற எதிரியை வளர்த்துவிடுவது எப்படியென்று ஒரு கையேட்டைத் தயாரித்தால் அதற்கான முதன்மை ஆசிரியராகப் பணிபுரிவதற்கான தகுதி வாய்ந்தவர்கள் பலர் திமுகவில் இருக்கிறார்கள். தமிழக பாஜக என்னும் சோனிக்கட்சி, மைய அரசின் அதிகாரம் தரும் தன்னம்பிக்கையுடனும் நாட்டிலேயே பெரிய கட்சியின் கிளை என்பதால் கிடைக்கும

துணைத்தலையங்கம்

பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை கடுமையான சர்ச்சையை உருவாக்கியது. இளையராஜாவை விமர்சித்தும் ஆதரித்தும் வெளியான எதிர்வினைகள், பிரச்சினையைக் காட்டிலும் எதிர்வினை ஆற்றியவர்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவின. பொதுவாகவே இளையராஜாவின் கருத்து

கண்ணோட்டம்
செந்தூரன்

இன்றைய இலங்கைச் சூழல் கவலையளிக்கிறது. அமைதி வழியில் காலிமுகத் திடலில் நடந்து கொண்டிருந்த போராட்டங்களில் ஆளும் அரசுத் தரப்பு நடத்திய தாக்குதல்கள் ஆளும் தரப்பினரின் இருப்புக்கே எதிராக மாறியிருக்கின்றன. கடுமையான மக்கள் போராட்டங்களின் ஊடாகக் குழு வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் ராஜ

கட்டுரை
கருணாகரன்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக இரண்டு மாதங்களில் மூன்று தடவை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. சொந்தச் சகோதரர்கள் என்றும் பார்க்காமல், நெருக்கடிக்குக் காரணமான ராஜபக்ஷவினரை அமைச்சரவையிலிருந்து வெட்டியெறிந்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ. அப்படியான நிர்ப்பந்தம் அ

கட்டுரை
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா

கண்டியின் கடைசி ராசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கதை சொல்லப்போகிறேன். அவரின் முழு வரலாறு அல்ல. ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் பற்றியது. நீங்கள் வாசிக்கப்போகும் இந்த வியாசத்திற்கு இரண்டு காலனிய கால ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்

கட்டுரை
தி. பரமேசுவரி

படம்: கிருஷ்ண பிரபு பரபரப்பான பேசுபொருளாக, கவலைப்படத்தக்க விஷயமாக, இளந்தலைமுறைப் போக்கை உணர்த்தும் அபாய அறிவிப்பாக, ஊடகங்களில் அரசுப் பள்ளி மாணவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்துப் பல செய்திகளைக் கவனித்திருப்போம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதைப் பொதுமைப்படுத்துவது தவறு. தமிழ்நாட்டின்

கட்டுரை
சு. உமாமகேஸ்வரி

கடந்த மாதங்களில், பள்ளி மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது குறித்து ஊடகங்கள் வழியாக ஏராளமான குரல்கள் ஒலி எழுப்பியுள்ளன.  பள்ளிகளுக்குள் தளவாடப் பொருட்களை அடித்து நொறுக்குவதாகவும், வகுப்பில் ஆசிரியரை நோக்கிக் கையை உயர்த்தி அடிக்கச் செல்வதாக

கவிதைகள்
மா. காளிதாஸ்

இருள் வெளிச்சம்                                                &n

கட்டுரை
மு. இராமனாதன்

     சில திரைப்படங்கள் வெளியாவதற்கும் முன்னாலேயே அவற்றைச் சர்ச்சைகள் சூழ்ந்துகொள்ளும். இதனால் படத்தைக் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாவதும் உண்டு. ஜெயமோகன் முன்னெடுத்திருக்கும் தமிழ்.விக்கி எனும் தளத்திற்கும் (https://tamil.wiki) இது ஏற்பட்டது. இது ஒரு கலைக் களஞ்சியம். இதன் தொடக்க வி

கட்டுரை
இசை

               பாரதிதாசன்   எமிலி டிக்கின்சன் அழகு சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன்

அறிமுகம்

ஆர்.பி. பாஸ்கரனுடன் முலா பென் ஹைம், டெல் அவிவ், இஸ்ரேல் 1967 தமிழ் நவீன இலக்கியச் சூழலிலும் சிறுபத்திரிகை இயக்கத்திலும் 1970-80கள் புத்துயிர்ப்புப் பெற்ற காலப்பகுதியாக இருந்தன. புதுக் கவிதை நிலைபெற்றதும் மாற்றுப் பதிப்பகங்கள் உருவானதும் விதம்விதமான சிற்றேடுகள் வெளியானதும் இக்காலப் பகுதியில்தா

கட்டுரை
டிராட்ஸ்கி மருது

தனது ஆசிரியரும் முன்னோடிக் கலைஞருமான  ஆர்.பி. பாஸ்கரன் குறித்து டிராட்ஸ்கி மருதுவின் உரை.  எழுத்து வடிவம் கிருஷ்ண பிரபு திசையறியாப் பயணத்தில் அடிவானமே இலக்காகிறது. போகப் போக நீளும் பயணம் அது. நம்மைச் செலுத்தும் இடத்திலிருப்பவர்கள் சரியான வயதில், சரியான நேரத்தில் நமக்கான திசையையும்

கவிதைகள்
ந. பெரியசாமி

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி   அரவம் நஞ்சாலான உடலைக் கொண்டு உலகை வலம் வரும் அரசதிகாரத்தின் காடுகளில் அலையும் ஆதி மனிதனின் சிரிப்பொலியில் அதிர்கிறது வனம். என் நிலம் கடும் விஷங்களை முறிக்கும் செடிகளைக் கொண்டது.   எதிர்ப்பக்க நடை செடிகள் வளர்ந்துகொண்டிருக்கும்

அஞ்சலி: யூசோப் காஜா
டாரில் கோ

மலேசியாவின் புகழ்பெற்ற ஓவியர் முகமது யூசோப் இஸ்மாயில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி காலமானார். யூசோப் காஜா என்றே பரவலாக அழைக்கப்பட்டுவந்த இவரது ஓவியங்களும் சுவர்சித்திரங்களும் சிலை நிறுவலாக்கங்களும் (installations) வரைபடங்களும் சிறார் ஓவியநூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றவை. பிப்ரவரி 10, 1954 இ

கதை
சத்யஜித் ரே

ஓவியங்கள்: மணிவண்ணன்   என் பெயர் அனிருத்த போஸ். திருமணமாகாத இருபத்தொன்பது வயதினன். கடந்த எட்டு ஆண்டுகளாகக் கல்கத்தாவில் ஒரு விளம்பர முகமையில் வேலைசெய்துவருகிறேன். கிடைக்கின்ற ஊதியத்தில் சர்தார் சங்கர் வீதியில் ஓர் அடுக்ககத்தில் ஓரளவுக்குச் சௌகரியமாக வாழ்கிறேன். தெற்குப் பார்த்த இரண்டு ஆஅற

கதை
செந்தூரன்

அந்துவான் செந்த் - எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ நாவல் பிரதியைப் பட்டுப்பாதை நாடகக்குழுவினர் மணல்மகுடி நாடகநிலத்தில் 30-04-2022 அன்று மேடையேற்றினார்கள். வசந்த் செல்வத்தின் இயக்கத்தில் திரை/ நிகழ்த்துக் கலைஞர்கள் மாயாவும் லட்சுமிபிரியாவும் நடித்திருந்தனர். அந்துவான் செந்த் எக்சுபெ

கட்டுரை
சுப்பிரமணி இரமேஷ்

தொண்ணூறுகளின் இறுதியில் கவிதையினூடாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் சல்மா. கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமியச் சமூகத்திலிருந்து காத்திரமாக ஒலித்த குரல் சல்மாவினுடையது. நவீன கவிஞர்களின் பட்டியலில் சல்மாவின் இடத்தைத் தவிர்க்க முடியாது. கவிதை இவரது அடையாளம். நாவல், சிறுகதை, பயண இலக்கியம் என அடுத்தடுத்

கதை
குல்சார்

ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி   அப்பா… தாத்தா முகக் கவசம் இல்லாமல் வெளியே போறார். மாடிப்படிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பதினொரு வயது சுகானி தந்தை சுமீத்தைப் பார்த்துச் சத்தமாகக் கத்தினாள். கணினி அறையில் வேலையாக இருந்த சுமீத் வெளியே எட்டிப் பார்த்தார். அப்பா… எதற்காக வெ

எதிர்வினை
தி.அ. ஸ்ரீனிவாஸன்

காலச்சுவடு ஏப்ரல் 2022 இதழில் பெருமாள்முருகன் ‘சாமிநாதனும் சிவகுருநாதனும்’ என்ற கட்டுரை எழுதியிருந்தார். அதில் உ.வே.சாவின் பெயர்மாற்றம் பற்றிய பீடிகையில் உ.வே.சா.வின் “குலதெய்வம் பெருமாள்; பெயர்களும் பெருமாள் நாமம். ஆனால் சிவ வழிபாட்டையும் சைவ வழிபாட்டு நெறிமுறைகளையுமே அவர் குட

நினைவு
மைதிலி

சிவரமணி பற்றிய கட்டுரைகள் வெளி வரும்போதெல்லாம் எனது நண்பர்கள் ‘அவளது கடைசிக்காலத்தில் நீ அவளுடன் மிக நெருக்கமாக இருந்தாயல்லவா, நீ ஏன் அவளைப் பற்றி ஏதும் கூறாதிருக்கிறாய்?’ எனக் கேட்பதுண்டு. இறந்தவர்கள் உயிருடன் வந்து நியாயம் கேட்கமாட்டார்கள் என்கிற துணிச்சலில் எவரைப் பற்றியும் யாரும்

மதிப்புரை
அம்ஷன் குமார்

  ‘எதிர் அரசியல் சினிமா’  ரதன்  நிழல் பதிப்பகம்  31/48, இராணி அண்ணா நகர்,  கே.கே.நகர்,  சென்னை - 600078   செல்: 9003144868.  பக்.176   ரூ.150   சினிமாவைப்பற்றித் தொடர்ந்து அக்கறையுடன் நெடுங்காலமாக எழுதிவரும

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

வெள்ளாமை (நாவல்) பெ. மகேந்திரன்   ராமையா பதிப்பகம்  ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை  சென்னை - 60014   பக்.248  ரூ.240   காலந்தோறும் சமூகம் மாறியபடி வந்திருக்கின்றது. விஞ்ஞானம் குறுக்கிட்ட பின் வாழ்க்கை நிலைபேறுடை

உள்ளடக்கம்