நீர்ப்பாசி
ஓவியங்கள்: மணிவண்ணன்
பரமேஸ்வரி தன்னுடைய கூட்டாளிகளோடு கடைவீதிக்கு நடந்து சென்றாள். மூவரும் வயர் கூடையைக் கையில் வைத்திருந்தார்கள். அது அவர்களுடைய அடையாளமாக இருந்தது. அவர்கள் வரிசையாக இருந்த நகைக்கடைகளைப் பார்த்தனர். இடதுபுறமா வலதுபுறமா என்று கண்ஜாடையில் பேசிக்கொண்டார்கள். பரமேஸ்வரியின் கூட்டாளிகள் இருவர் குட்டையாக இருந்தார்கள். பரமேஸ்வரி உயரமாக இருந்தாள். கூட்டமில்லாத நகைக்கடையின் முன் நின்றவர்களைக் கடைக்காரர் அழைத்தார். கடைக்குள் நுழைந்து உட்கார்ந்தார்கள். சிறிய கடை, மூவரும் அமர்ந்ததும் நிறைந்தது. இருக்கைகள் காலியாக இல்லை. அவர்கள் நீளமான கண்ணாடி ஷோகேஸிற்குள் இருந்த நகைகளை ஆர்வமாகப் பார்த்தார்கள். குட்டையான பெண்களில் ஒருத்தி தன்னுடைய கூடையிலிருந்த பர்ஸை எடுத்துப் பணத