மேல்பாதி கோயில் நுழைவு: அரசியலும் தொன்மமும்
விழுப்புரம் நகரத்தின் அருகிலிருக்கிறது மேல்பாதி கிராமம். தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களில் வன்னியர்களும் அங்கு வசிக்கிறார்கள். வன்னியர் பகுதியிலிருக்கும் திரெளபதி அம்மன் கோயிலில் 08.04.2023ஆம் நாள் கதிரவன் என்னும் தலித் இளைஞர் நுழைந்திருக்கிறார். கதிரவனுக்கு ஏற்கெனவே வன்னியர் வகுப்பில் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். எனவே, அப்பகுதியில் அவருக்கு இயல்பான நடமாட்டம் இருந்துவந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியில் எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் இயல்பாகக் கோயிலுக்குள் சென்றிருக்கிறார். ஆனால் கோயிலுக்குள் நுழைந்து வழிபட வந்தார் என்ற ‘சந்தேகத்தின்’ பெயரில் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பழக்கமான நண்பர்களும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கதிரவன் தாக்கப்பட்டதை அறிந்து தடுக்க ஓடிவந்த கந்தன், கற்பகம் ஆகியோரும் தாக்கப்பட்டிருக்கின்றனர். இதன் பிறகு சென்னை கும்பகோணம் சாலையில் த