‘கருப்புக்கன்னி’ கு. அழகிரிசாமியின் கவிதை முயற்சிகள்
சிறுகதை எழுத்தாளராகவே அறியப்படும் கு. அழகிரிசாமி கவிஞர் என்பது பலருக்கும் தெரியாது. அவரது கவிமுகம் சமகாலத்தில் இருந்த சிலரை அன்றிப் பலரும் அறியாதது. கு. அழகிரிசாமி கால நவீன எழுத்தாளர்களில் பலர் கவிஞர்களும்கூட. புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம் பின்னால் வந்த ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ரகுநாதன் எனப் பலரும் கவிதை எழுதியவர்கள் தான். கவிதையிலும் அவர்களது பங்கு கணிசமானதுதான். ஆனால் அவர்களைப் போலவே அழகிரிசாமியும் கவிதை எழுதினார் என்றாலும் அவரது கவிதை முகம் பளிச்சிடவில்லை. எனினும் அவரது சமகாலத்தவர் அவரது கவிதை ஆற்றலை அறிந்திருந்தனர்.
“கு. அழகிரிசாமி நிறைய கவிதைகள் எழுதினார். சொந்தமா எழுதினாருங்கறது ரொம்ப பேருக்கு இப்போ தெரியாது. அவர் ‘குவளை’ என்கிற பெயரில் கவிதைகள் எழுதினார். கிராம ஊழியன் பத்திரிகையில் கூட ரெண்டு மூணு பிரசுரம