தூரம் அதிகம் உண்டு
‘கேட்டீங்களா, இது என்ன சத்தம் தெரியுதா? தூரத்தில் இருந்து கேட்கிறதே’ என்று படுக்கையிலிருந்த காந்தியிடம் கேட்டார் ராஜாஜி. பாலக்காடு டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயரின் சபரி ஆசிரமத்தில் இரவு தூங்குவதற்காகப் படுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்கப்பட்ட அறிவினா அது. ‘தெரியவில்லையே! ஏதோ குலவைச் சத்தம்போல இருக்கிறது’ என்றார் காந்தி . ராஜாஜி அவரிடம் அச்சத்தத்தைப் பின்வருமாறு விளக்கினார்.
‘சத்தமிடுகிறவர்களுக்கு நாயாடிகள் என்று பெயர். இவர்கள் யார் கண்ணிலும் படாமல் காட்டுப்பகுதியில் வாழ்கிறவர்கள். இவர்கள் தாம் வருவதை மேல் வகுப்பினருக்குத் தெரிவிக்கச் செய்யும் ஒலியே அந்தக் குலவைச் சத்தம். இவர்கள் கடையில் பொருள் வாங்க வரும்போது காசை ஒரு கல்மேல் வைத்துவிட்டு வேண்டிய பொருளைச் சத்தமாகச் சொல்வர். சொல்லிவிட்டுக் கண்ணில்படாமல் ஓரமாகப் போய்ப் பதுங்கிக்கொள்ள வேண்டும். கடைக்காரர் பொருளை வைத்துவிட்டுக் காசை எடுத்துக் கொள்வார். நாயாடிகள் என்றழைக்கப்பட்ட இவர்களைப் பார்த்தாலே தீட்டு. இவர்கள் கேரளப் பகுதியில் வாழ்கிறவர்கள்’ என்றார் ராஜாஜி.
காந்தி நி