மணிப்பூர் நெருப்பை அணைப்பது யார்?
நெருப்பைப் பற்றவைப்பது எளிது. பற்றிப் படர்ந்தபின் அதனை அணைப்பது எளிதல்ல.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் சுமார் இரண்டு மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 2023 மே 3ஆம் நாள் பற்றத் தொடங்கிய கலவர நெருப்பு இன்னும் அணையவில்லை; கொழுந்துவிட்டு எரிந்துகொண்டுதானிருக்கிறது. அணைவதற்கான சாத்தியக்கூறு எதுவும் கண்முன் தெரியவில்லை. மாநில முதலமைச்சர் பைரோன் சிங் கையறு நிலையில் இருப்பதாக வெகுஜன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அந்நிலையில் இருப்பதான தோற்றம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதென்றும் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணம் அவரிடம் இல்லையென்றும் சமூக ஆர்வலர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். காவல்துறை, ராணுவம், துணை ராணுவப் படைகளெல்லாம் இருந்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாதது நிர்வாகத் தோல்வியின் வெளிப்பாடல்லவா? இன