‘புண்சுமந்து பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்’
இந்தக் கார்த்திகை மாதம் வந்தால் குழந்தை ம. சண்முகலிங்கத்திற்குத் தொண்ணூற்றியிரண்டு வயது. 1957இல் தனது முதலாவது நாடகமான ‘அருமை நண்ப’னை அவர் எழுதி அறுபத்தாறு வருடங்கள் கடந்துவிட்டன. நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தும் முப்பத்தெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. காலமொரு நதி; வருடங்களை அது அள்ளிச் செல்கிறது. அரங்கின் பல்வேறு துறைசார் பயில்வுகளுக்குப்பால் இன்று எம்முன்னால் நூற்றுக்கும் மேற்பட்ட அவரது நாடகங்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களும் காணப்படுகின்றன. யுத்தமும் இடப்பெயர்வும் அவற்றிற் சிலவற்றை முழுதாகவோ, பகுதியளவிலோ தின்று தீர்த்துள்ளது. அவரது நாடகப் பாடங்களை முன்னிறுத்தும் இச்சிறு கட்டுரை, அவரது அரங்கு தொடர்பில் மேலும் விரித்து விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களுக்கான முற்குறிப்புகளாக அமைகிறது.
1950இல், தனது