நான் பெற்ற செல்வங்கள்
சேலத்தில் ‘பாலம் தி புக் மீட்’ என்கிற தரமான புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுப் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியம், அறிவியல், பண்பாடு, அரசியல், வரலாறு, சிறார் இலக்கியம், ஆங்கில நூல்கள் எனத் தொடர்ச்சியாக முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களை ‘பாலம் வாசகர் சந்திப்பு’ அறிமுகம் செய்திருக்கிறது.
முந்நூற்று ஐம்பது நேரடிக் கூட்டங்களும் நூற்றைம்பது இணையவழிக் கூட்டங்களுமாக ஐந்நூறு கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் நேரடியாகவும், சனிக்கிழமை மாலை நேரலையிலும் இக்கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளன. அண்மையில் நடந்த ஐந்நூறாவது நேரலை நிகழ்வில் எஸ்.வி ராஜதுரை, தி