ஏற்க மறுத்தல் ஏற்று மறுத்தல்
குதிரையைக் காண்கிறேன்; குதிரைத்தனம் என்ற ஒன்றை நான் கண்டதில்லை.
அந்தஸ்தேன்
(கிரேக்க கினிக்கர்)
மொழி நதியைப் போன்றது. வண்டலும் வகையுமாக அது கடல் சேர்ப்பது ஏராளம். கால ஓட்டத்தில் கடல் நிரம்பித் ததும்புகிறது. இலக்கிய வரலாறென பரிணாமம் கொள்ளும் கடல் ஆளுமைகளையும் வகைமைகளையும் பிரதிகளையும் சுமந்து நிற்கிறது. புதிய நீரை, புதிய தாதுக்களைச் சேமிக்க கடல் காத்திருக்கிறது. நதி காலத்தின் தீரத்தில் ஓடுகிறது.
தொண்ணூறுகளில் உருவான தலித் கவிதைப் போக்கு நதியின் நீரோட்டத்தில் பாரிய சலனங்களை, மாற்றுப் பாதைகளை, கலங்கலை, தன் பங்கிற்கு காத்திரமாக உருவேற்றியது. அதன் வீச்சு இரண்டாயிரங்கள் வரை உக்கிரமாக மிதந்தது. இரண்டாயிரத்துப் பத்துக்குப் பிறகான புதிய தலைமுறை எழுத்துக்களில் இந்தப் போக்கு வேறுவிதமாக திசை கொள்கிறது.
பிரகடனப்படுத்தப்பட்ட தலித் கவிதைகளின் தொகுப்புபாக இன்று ஒன்றுகூட இல்லை. புதிய