வழிப்போக்கன்
அதோ வருகிறான் பாருங்கள்
வழிப்போக்கன்
என்னைவிட ஆறேழு வயது
அதிகமிருக்கும் அவனுக்கு
உம்மைவிடக் குறைவயதுதான்
நீரோ எனக்கும் இளையவர்
சற்றே விளங்கும்படிக் கூறவேண்டுமெனில்
என் தாத்தனின்
மகனின் அகவையைக் காட்டிலும்
அதிகமெனக்கு
ஆயினும் அவரோ என் தந்தை
இப்போது புரிகிறதா
நீங்கள் குழம்பிப்போயிருப்பதை
காட்டிக்கொடுக்கிறது பாருங்கள்
உங்கள் முகம்
மன்னிக்கவும்
இவ்வளவு நேரம் உங்களை நிற்கவைத்தே
பேசிக்கொண்டிருக்கிறேன்
இந்த நாற்காலியில் அமருங்கள்
சூடாய் ஏதேனும் குடிக்கிறீர்களா
அல்லது குளிர்ச்சியாகவேனும்
மேசைமேல் இருக்கும் பத்திரிகைகளைப்
படித்துக்கொண்டிருங்கள்
இன்னும் சிறிது நேரத்தில்
உணவு தயாராகிவிடும்
இருவரும் பசியாறச் சாப்பிட்டபின்
கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு
மீண்ட