சர்ப்பம்
1
மீசையற்ற ஆண்களும்
முலைகளற்ற பெண்களும்
உரையாடிய மிகப்பெரிய அறையில்
ஜன்னல்களின் சித்திரங்களிருந்தன.
அங்கவர்கள் சேர்ந்த
சுதந்திர ரகசிய வழிகள் குறித்து
விளக்கம் கேட்ட விஸ்கி புட்டியில்
பேரலை தோன்றி
உடல்களைத் தள்ளித் திருப்பியது.
2
கார்கோடகன் என்றொரு சர்ப்பம்
குறிகளையும் யோனிகளையும் மாத்திரம்
காலகாலமாய் விழுங்குஞ் சர்ப்பம்
தலைகள் பலவேசமுள்ள நச்சு சர்ப்பம்__இது
பாதியுடல் பொன்னாலான மகா சர்ப்பம்.
கூரையின் வழி கசிந்திறங்கியது__சுவர்
மூலையில் சுருண்டு தலை உயர்த்தியது.
3
மார்பில் மயிர்களற்ற ஆண்களின் குரல்
பூனையினுடையதாய் மெலிந்திருக்க
இரும்பில் கடைந்த பெண்களின் குரல்
பாடத் தொடங்கியபோது
அவ்வறை தன் குறிக்கோளை
எட்டும் தருவாயிலிருந்தது.
4
மொழியினை உரித்து உரித்து<br /