காலத்துள் புகுதல்
காலக் குமிழிக்குள் நுழைகிறேன்
வெடித்துச் சிதறுகிறது அது
ஏழு நீர்த் துளிகளாய்
துளிகளில் முதலாவது
என்னை மாமரத்தில்
ஏற்றிவிட்டது
இரண்டாவது
பக்கத்து வீட்டுச் செம்பருத்தியை
பறிக்கச் சொன்னது
மயக்க மயக்க
காதல் செய்
என்றது மூன்றாவது
நான்காவது
அவன் பத்து தலைகளில்
ஒன்றையாவது
கொய் என்றது
அது மட்டும் போதாதென்று
சித்தபிரமைக்குள் அவனைத் தள்ளிவிட
ஐந்தாவது
யோசிக்கிறது
அவனை மட்டுமா
என்றது ஆறாவது
விபரீதம் போதும்
போய்விடலாமென்கிறது
ஏழாவது துளி
மின்னஞ்சல் - lavanya.sundararajan@gmail.com