புல்லரிப்பு
எங்கோ ஒரு மூலையில்
செத்த மாட்டின் தோல்
மயிர்கள் உதிர்த்து
அம்மணமாகிறது
சாணைப் பிடித்த
வெயில் வெட்டி
அம்மணத் தோல்
இறுகுகிறது
வெயில் படிந்து படிந்து
இறுகிய தோல்
பறையாகிறது
பறையில் விழுந்த
காய்ந்த செத்தை
சத்தத்தில் எனது
செவி திறக்கிறது
வாட்டசாட்டமான தீ
வாட்டிய பறையின்
வாசத்திற்கு நாசித் துவாரங்கள்
விடைக்கின்றன
லேசாய்க் கண்
விழிக்கிறேன்
வெட்டப்பட்ட கொல்லப்பட்ட
மூதாதையர்களின் சிதைந்த
அழுகிய உறுப்புகளைக் கிளறிவிட்டுக்
கைகளை மட்டும் பிய்த்தெடுத்து
அடிக்குச்சி
சுண்டுக்குச்சியாக்கி
அடிக்கிறேன்
அடித்த அடியில்
ஆடிய கோப அடவுகளில்
எனது மூதாதையர்களின்
கைகளில் புல்லரிக்கிறது
எரிந்துகொண்டிருக்கும்&nb