நவம்பர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
நவம்பர்
    • கட்டுரை
      காதல்-, காமம்: தத்துவ, முரண், கற்பித மொழிநடை
      கூச்சல்களுக்கிடையில் தவழும் ‘தேவநாயகியா’ குரல்கள்
    • கதை
      வாராவழி
      நீலம்
      உதிரத் துளி
    • பாரதியியல்
      ‘பாரத ஜன சபை’யைப் பாரதி எழுதிய காலம்
    • நேர்காணல்: நிருத்யா பிள்ளை
      “நான் அதுவல்ல; அவர்களும் அதுவல்ல”
    • பதிவு: காலச்சுவடு 300 - 30
      தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தனித்துவ இதழ்
    • பத்தி: காணச் சொல்லுகிறேன்
      அரூபமாய் உருளும் பந்து
    • களஞ்சியம்
      காலப் பெட்டகத்திலிருந்து ஒரு கலைப் பொக்கிஷம் சி.சு. செல்லப்பாவின் ஜல்லிக்கட்டுப் புகைப்படங்கள்
    • அஞ்சலி: நானா பாடேகர் (1956-2026)
      நட் சாம்ராட்டின் சாபம்
    • பத்தி இன்றும் என்றும் 7
      ஒற்றுமையின் ராகங்கள்
    • பதிவு
      அடையாளம் அழியாப் புகழ்
    • திரை: டோரதி
      இருமைக்கு வெளியே ஊசலாடும் பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      கண்முன் விரிந்த கனவு
    • மதிப்புரை
      காலக் கண்ணாடிக் கதைகள்
    • கவிதைகள்
      பாலஸ்தீனக் கவிதைகள்
    • தலையங்கம்
      ஜனநாயகத்தை நெரிக்கும் பொதுவெளி முடக்கம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் பதிவு: காலச்சுவடு 300 - 30 தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தனித்துவ இதழ்

தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தனித்துவ இதழ்

பதிவு: காலச்சுவடு 300 - 30
சு. தீபிகா

சென்னை, பட்டாபிராம் தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறையும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து 24.09.2026 அன்று ‘தலித் மற்றும் பெண் எழுத்து’ என்னும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரும் ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கம், இந்துக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சுப்பிரமணி இரமேஷ் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வின் தொடக்க உரையில் ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி தனக்கும் காலச்சுவடு இதழுக்குமான உறவைப் பதிவுசெய்தார். எழுபதுகளில் சிறுபத்திரிகை களின் நிலையை எடுத்துக்கூறிய அவர், அக்காலச் சிறுபத்திரிகைகளில் இருந்து காலச்சுவடு எவ்வாறு தனித்துவத்துடன் வெளிவந்தது என்பதைப் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி விவரித்தார். மாற்றுச் சிந்தனையுடன் வெளிவந்துகொண்டிருந்த காலச்சுவடு, ‘சுந்தர ராமசாமி என்ற தனிமனிதரோடு நின்றுவிடாமல் பலரின் கூட்டுழைப்பால் தொடர்ந்து வளர வேண்டும்’ என்ற சுந்தர ராமசாமியின் நோக்கம் இன்று கண்ணன் வழியாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதையும் பெருமகிழ்வுடன் பதிவுசெய்தார். காலச்சுவடு இதழ் தமிழ் இலக்கிய உலகில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளதில் அதன் பொறுப்பாசிரியர்களாக இருந்த அரவிந்தன், தேவிபாரதி, இன்றைய பொறுப்பாசிரியர் சுகுமாரன் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது என்றார். காலச்சுவடு முதல் இதழில் இருந்தே தலித் எழுத்துக்கும் பெண் எழுத்துக்கும் பங்களித்ததைப் பல்வேறு உதாரணங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

‘தலித் எழுத்து’ என்னும் முதல் அமர்வில் ‘தலித் புனைவுகள்’ குறித்து ஜெ. சுடர்விழி, ‘தமிழ் இதழியலும் தலித்தியச் சுவடுகளும்’ எனும் தலைப்பில் ஆய்வாளர் ஆதவன் பழனி, ‘தலித்திய ஆய்வுகள்’ குறித்து ஞா. குருசாமி ஆகியோர் உரை நிகழ்த்தினர். காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாகவும் காலச்சுவடு இதழின் வழியாகவும் வெளிவந்துள்ள தலித் புனைவுகள் குறித்து விரிவானதொரு அறிமுகத்தை ஜெ. சுடர்விழி வழங்கினார். இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, பாமாவின் ‘கருக்கு’, ஸ்ரீதர கணேசனின் ‘சடையன் குளம்’,  ‘சந்தி’, தமிழ்ப்பிரபாவின் ‘பேட்டை’, திருக்குமரன் கணேசனின் ‘கறிவிருந்தும் கவுளி வெற்றிலையும்’, ஜே.பி. சாணக்யாவின் ‘என் வீட்டின் வரைபடம்’, ‘கனவுப் புத்தகம்’, எஸ். ஜே. சிவசங்கரின் ‘ரோஸ் கலர் ஆனை’ ஆகிய படைப்புகளில் உள்ள தலித் வாழ்வியலைக் கோடிட்டுக் காண்பித்தார்.

தொண்ணூறுகளில் சிறுபத்திரிகைகளின் முக்கியத்துவத்தையும் அதில் காலச்சுவடின் பங்களிப்பு குறித்தும் உரை நிகழ்த்தினார் ஆதவன் பழனி. சமூகத்தை எவ்வாறு புரிந்துகொள்வது, தலித் இலக்கியத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பது போன்ற வினாக்களுக்குப் பதில் தேடும் வாசகர்கள், காலச்சுவடு இதழ்களை ஒட்டுமொத்தமாக வாசிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். பல சிறுபத்திரிகைகள் தமிழில் தோன்றினாலும் நிலைத்து நிற்பது வெகு குறைவே. அதில் காலச்சுவடு வெற்றி கண்டுள்ளது. இதற்குக் காரணம், ‘தன்னைப் புதுப்பித்துக்கொண்டு தனித்துவமாக இயங்கிவருவதே’ என்றார்.

“முப்பத்தைந்துக்கும் மேலான தலித் ஆளுமைகளை இலக்கிய உலகிற்குத் தொடர்ந்து அறிமுகம் செய்துவைத்த பெருமை காலச்சுவடு இதழுக்கு உண்டு” என்றார்.

ஞா. குருசாமி தன் உரை அம்பேத்கர் மீதான வாசிப்பு, அயோத்திதாசர் மீதான வாசிப்பு, தலித் கல்வி வரலாறு, பெளத்தம் குறித்த வாசிப்பில் புதிய புரிதல், தலித் புனைவுகள் மீதான ஆய்வு என ஐந்து பகுப்புகளாக வகைமைப்படுத்தி உரை நிகழ்த்தினார். காலச்சுவடு இதழில் வெளிவரும் கட்டுரைகளின் முக்கிய அம்சங்களையும் எடுத்துரைத்தார். தீவிரமாக எழுதுபவர்களுக்குக் காலச்சுவடு இதழ் தொடர்ந்து இடமளித்து வருவதைத் தகுந்த சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார்.

‘பெண் எழுத்து’ குறித்த இரண்டாம் அமர்வு பிற்பகலில் தொடங்கியது. இந்த அமர்வில் ‘பெண் கவிதைகள்’ என்ற தலைப்பில் தி. பரமேசுவரி, ‘பெண்ணெழுத்து: விமர்சனங்கள், விவாதங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ‘பெண் புனைவுகள்’ என்ற தலைப்பில் நவீனா ஆகியோர் பெண் எழுத்திற்குக் காலச்சுவடு கொடுத்துவரும் முக்கியத்துவத்தைப் பல தரவுகளை எடுத்துகொண்டு ஆய்வு நோக்கில் உரை நிகழ்த்தினர்.

1947ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த பெண் எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுக்கும்போது தான் பெற்ற அனுபவம், எழுந்த கேள்விகள், அடைந்த வியப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார் தி. பரமேசுவரி. எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் திரைப்படமாக்குவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டினார். சங்க காலம், பக்தி காலம், நவீன காலம் ஆகியவற்றில் பெண்களின் நிலை குறித்தும் ஈராயிரம் ஆண்டுகளில் பெண் கவிதைகள் அடைந்துள்ள மாற்றங்கள் குறித்தும் விளக்கினார்.

நவீன இலக்கியத்தில் கடந்த நாற்பதாண்டுகளில் சாதியப் பாகுபாடு, ஆண் பெண் பாகுபாடு குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. தலித்துகளும் பெண்களும் அவர்களின் வலிகளை அவர்களே எழுத்தாக மாற்றும்பொழுது அவர்களின் உணர்வுகள் வாசகர்களுக்கு அப்படியே கடத்தப்படும். இவ்வாறு எழுதவரும் தலித், பெண் எழுத்தாளர்களுக்கு இதழ், பதிப்புலகத்தில் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைத்தார் ஸ்டாலின் ராஜாங்கம். தொடக்கத்தில் தமிழ்ச் சூழலில் பெண் கவிஞர்கள் எதிர்கொண்ட மோசமான எதிர்வினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்டாலின் ராஜாங்கம் தன் உரையில், பெண் எழுத்து குறித்த விரிவானதொரு சித்திரத்தை உருவாக்கிக் காட்டியதுடன், நம்பிக்கையோடு எழுதவரும் தலித், பெண் எழுத்தாளர்களுக்குக் காலச்சுவடு தன் பதிப்பகத்தின் வழியாகவும் இதழின் வழியாகவும் பெரும் பணியைச் செய்து வருவதையும் எடுத்துரைத்தார்.

“பெண்மனம் தாயிடம் இருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படுகிறது; ஆண் எழுத்தாளர்களுக்குள்ளும் பெண்மனம் உண்டு,” என்ற கருத்தோடு தன் உரையைத் தொடங்கினார் நவீனா. பெண்மனம் கொண்டவரே எழுத்தாளராக இருக்க இயலும் என்றார். அம்பை, ஆர். சூடாமணி, சுஜாதா செல்வராஜ், லாவண்யா சுந்தரராஜன் உள்ளிட்டோரின் எழுத்துகளுக்குக் காலச்சுவடு அளித்த இடம் குறித்துத் தம் உரையில் எடுத்துரைத்தார். மேலும், பெண் எழுத்தாளர்களும் பெண்ணிய எழுத்தாளர்களும் பெண்களின் உடல்பற்றி எழுதியது போதும்; பெண்ணுடல் குறித்த விழிப்புணர்வு அடைந்த சமூகமாக தமிழ்ச்சமூகம் உள்ளது. இக்கால கட்டத்திலும் பெண்களின் உடல் உறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இலக்கியத்தைப் பின்னோக்கித் தள்ளுவதாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். பெண்களின் புதுப்புதுப் பிரச்சினைகளை முன்வைத்து பெண் எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தலித் எழுத்து அல்லது பெண் எழுத்து எனத் தனித் தனியாகக் கருத்தரங்கம் நடைபெறாமல், ஏன் ஒரே தலைப்பாக வைத்து இன்று ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்ற கேள்வியோடு நிறைவுரையைத் தொடங்கினார் கவிஞர் சுகிர்தராணி. ஏனென்றால், தலித் எழுத்து, பெண் எழுத்து இரண்டும் ஒரு தண்டவாளத்தின் இரு இணை கோடுகள் என்று பதிலும் கூறினார். ஆதிக்கச் சமூகத்தினரால் தலித்துகள் ஒடுக்கப்படுவது போன்று ஆண் சமூகத்தினரால் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்க வேண்டும் என இன்றும் நாம் பேசிகொண்டிருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரும் கல்வியாளராக இருப்பவர்களின் மனதிலும் சாதி என்ற அழுக்கு ஒட்டியிருப்பதைத் தன் வாழ்வனுபவத்தோடு பொருத்திக்காட்டினார்.

காலச்சுவடு தன்னைச் சிறுபத்திரிகை என்ற ஒரு பரப்பில் மட்டும் நிறுத்திகொள்ளாமல், பன்முகத்தன்மை யோடு வெளிவந்துகொண்டிருப்பதை உரையாளர்கள் தங்களின் உரைகளில் பதிவுசெய்தனர். நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரை நிகழ்த்திய சுப்பிரமணி இரமேஷ், காலச்சுவடு நிறுவனத்திற்கும் இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறைக்குமான உறவைச் சுட்டிக்காட்டியதுடன், தமிழ்ச் சூழலில் காலச்சுவடு இதழ், பதிப்பகத்தின் உன்னதமான செயல்பாடுகளை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டினார். சிறந்த பதிப்பகச் செயல்பாடுகளுக்காகக் காலச்சுவடு பெற்றிருக்கிற விருதுகளை அவர் பட்டியலிட்டார். கல்லூரி முதல்வர் க. கல்விக்கரசி இக்கருத்தரங்கம் நடத்துவதன் நோக்கம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். தமிழ்த்துறையின் போற்றத்தக்க செயல்பாடுகள்பற்றி கல்லூரி இயக்குநர் நா. இராசேந்திர நாயுடு வாழ்த்துரையில் குறிப்பிட்டுப் பேசினார். கருத்தரங்கம் சிறப்பாக நடைபெறக் காரணமான அனைவருக்கும் பேரா. ச. கண்ணதாசன் நன்றி கூறினார். சென்னையைச் சுற்றிலும் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் காலச்சுவடு சார்பில் ஓர் இதழும் ஒரு நூலும் அன்பளிப்பாக  வழங்கப்பட்டன.

சு. தீபிகா: உதவிப் பேராசிரியர், இந்துக் கல்லூரி, சென்னை.

       மின்னஞ்சல்: deepikas25082001@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.