காலப் பெட்டகத்திலிருந்து ஒரு கலைப் பொக்கிஷம் சி.சு. செல்லப்பாவின் ஜல்லிக்கட்டுப் புகைப்படங்கள்

எழுத்தாளர்கள் இலக்கியத்துக்கு அப்பால் பிற துறைகளில் ஈடுபாடு கொள்ளும்போது அவர்களின் படைப்புகள் செழுமையடைகின்றன. தொல்லியலில் பட்டம் பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் ரோஜர் மார்ட்டின் தூ கார்ட், பழைய கையெழுத்துப் படிகளைச் சேகரித்துப் பாதுகாப்பதில் விருப்பமுடையவர். அதன் பிரதிபலிப்புதான் ‘தபால்காரன்’ நாவல். தூரதேசங்களுக்குப் பயணித்துப் பலவித நிலக்காட்சிகளில் மனம் தோய்ந்தவர் ரவீந்திரநாத் தாகூர். விளைவாக, அவரது எழுத்துக்களில் இயற்கை வர்ணனைகள் தனிச்சிறப்புடன் அமைந்தன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஆர்வமுடைய எர்னெஸ்ட் ஹெமிங்வேயிடமிருந்து ‘கடலும் கிழவனும்’ நாவல் கிடைத்தது; அவர் காளைச் சண்டையிலும் நாட்டமுடையவர். பல கட்டுரைகளிலும் ‘தி சன் ஆல்சோ ரைசஸ்’ நாவலிலும் அவரது காளைச் சண்டை மோகம் வெளிப்பட்டது. இப்படிப் பிறதுறை ஈடுபாட்டினால் இலக்கியத் தரத்துடன் ஆவண மதிப்பும் கொண்ட படைப்புகளை
