ஒற்றுமையின் ராகங்கள்

பிஸ்மில்லா கான் ஷேக் சின்ன மௌலானா
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வுக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக லாகூருக்குச் சென்றிருந்தேன். அங்கே, இந்துஸ்தானி செவ்வியல் இசையில் நாட்டம் கொண்ட ஓர் இளம் பாடகரைச் சந்தித்தேன். கராச்சியில் வசிக்கும் குருவிடம் இசை பயில்வதற்காக ஒவ்வொரு வாரமும் அங்கே சென்றுவந்தார். எனக்குப் பாடத் தெரியாது. ஆனால், இந்துஸ்தானி இசையின்மீது பல ஆண்டுகளாகக் காதல் உண்டு. அந்த இளம் பாகிஸ்தானியப் பாடகர் என்னோடு பகிர்ந்துகொண்ட செய்தி வியப்பை ஏற்படுத்தியது. அவருடைய குரு, குறிப்பிட்டவொரு ராகத்தைக் குறிப்பிடும்போது அது ‘இந்துக்களுக்கான ராகம்’ என்று இகழும் வழக்கம்
