‘பாரத ஜன சபை’யைப் பாரதி எழுதிய காலம்
‘பாரத ஜன சபை’ என்பது இப்போது நமக்கு அந்நியமாகிவிட்டது.
சொல்லாட்சியைக் குறிப்பிடுகிறேன்!
இந்திய விடுதலைக்குப் போராடிய காங்கிரசைக் குறிக்கப் பாரதி பயன்படுத்திய சொல்லாட்சி இது!
காங்கிரசில் ஒரு பிரிவாகச் செயல்பட்ட புதிய கட்சியாரின் அணியில் இருந்தவர் பாரதி. 1907இல் நடைபெற்ற 23ஆம் காங்கிரஸ் மாநாடு சூரத் நகரில் நடந்தபோது அதில் பங்கேற்றவர் பாரதி.
திலகர், விபின் சந்திர பாலர், அரவிந்தர் முதலியோரின் புதிய கட்சியாரின் ‘சென்னைப் பிரதிநிதிகள்’ என அழைக்கப்பட்ட, தமிழ்மண்ணின் பிரதிநிதிகளில் முக்கியமானவர் பாரதி. சூரத்துக்குச் சென்றுவந்தபின் அந்த அனுபவங்களை, அந்தக் காங்கிரசில் நடந்தவற்றைப் பாரதி ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரை’ என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அந்த அளவுக்கு முக்கியமான காங்கிரஸ் மாநாடு. 1908 மார்ச் மாதம் குறுநூலாக அது வெளிவந்தது.
இருபத்துமூன்றாவது காங்கிரசில் பங்கேற்றதைக் குறுநூலாக எழுதிய பாரதி, சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ. அரங்கசாமி ஐயங்காரின் விருப்பமும் தனது விருப்பமும் ஒன்றாக
