நவம்பர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
நவம்பர்
    • கட்டுரை
      காதல்-, காமம்: தத்துவ, முரண், கற்பித மொழிநடை
      கூச்சல்களுக்கிடையில் தவழும் ‘தேவநாயகியா’ குரல்கள்
    • கதை
      வாராவழி
      நீலம்
      உதிரத் துளி
    • பாரதியியல்
      ‘பாரத ஜன சபை’யைப் பாரதி எழுதிய காலம்
    • நேர்காணல்: நிருத்யா பிள்ளை
      “நான் அதுவல்ல; அவர்களும் அதுவல்ல”
    • பதிவு: காலச்சுவடு 300 - 30
      தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தனித்துவ இதழ்
    • பத்தி: காணச் சொல்லுகிறேன்
      அரூபமாய் உருளும் பந்து
    • களஞ்சியம்
      காலப் பெட்டகத்திலிருந்து ஒரு கலைப் பொக்கிஷம் சி.சு. செல்லப்பாவின் ஜல்லிக்கட்டுப் புகைப்படங்கள்
    • அஞ்சலி: நானா பாடேகர் (1956-2026)
      நட் சாம்ராட்டின் சாபம்
    • பத்தி இன்றும் என்றும் 7
      ஒற்றுமையின் ராகங்கள்
    • பதிவு
      அடையாளம் அழியாப் புகழ்
    • திரை: டோரதி
      இருமைக்கு வெளியே ஊசலாடும் பயணம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      கண்முன் விரிந்த கனவு
    • மதிப்புரை
      காலக் கண்ணாடிக் கதைகள்
    • கவிதைகள்
      பாலஸ்தீனக் கவிதைகள்
    • தலையங்கம்
      ஜனநாயகத்தை நெரிக்கும் பொதுவெளி முடக்கம்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு நவம்பர் எதிர்வினை கண்முன் விரிந்த கனவு

கண்முன் விரிந்த கனவு

எதிர்வினை

யோகபிரியா (yogapriya_yp)

அக்டோபர் மாதத் தலையங்கம் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், மாணவர் மன்றத் தேர்தல்களை எவ்வாறு ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதையும், மாணவர் மன்றங்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அவை சமூகத்தில் எத்தகைய நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் விளக்கியது.

மாணவர்களின் ஜனநாயகப் பங்கேற்பையும், அரசியல் விழிப்புணர்வையும் வளர்ப்பதற்கு, இது மிகவும் அவசியமானதாகும்.

வைதேகி (readsandscenes)

மத, சாதிய வன்முறைகளின் களமாகக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மாறிவிடும் என்று அதிகார அமைப்புகள் மாணவர் மன்றத் தேர்தல்களை முடக்கியிருந்தால் அது என்னை பூசி மெழுகும் சமாச்சாரம். இளைஞர்களின் சமூக அக்கறையினைப் பலவீனப்படுத்துவதற்காக பின்னப்பட்ட சூழ்ச்சியே அது. மாணவ இயக்கங்கள் வன்முறைகளின் உறைவிடம் என்று தொடுக்கபட்டிருக்கும் பிம்பம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. ஒரு புரட்சிக்குரல் தப்பித்தவறியும் எழுந்துவிடக் கூடாது என்பதில் அதிகார மையங்கள் தெளிவாக இருந்ததின் விளைவே இம்மாணவ இயக்கங்களின் தேர்தல் என்ற ஒன்று இன்று இல்லாமல் போனது.

பிறகு தகுதியான தலைவர்கள் எங்கிருந்து வருவார்கள்? மக்களால் நடிகர்களைத்தான் தலைவர்களாக்க முடியும். சட்டசபைக் காணொளிகளில் அப்டேட்டாக இருந்தால் நாமெல்லாம் அரசியல் அறிவுஜீவிகள் என்ற மாயப்பெருமிதம் மட்டும்தான் மிச்சம்.

காயத்ரி (Books_and_lits)

காலச்சுவடு இதழ் புத்தகங்கள், வாசிப்பனுபவங்கள், எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள், அவர்களது பங்களிப்புகள் ஆகியவற்றின் கலவையாக மட்டும் இருக்குமென நினைத்திருந்த என் மடமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்துவரும் வெளிச்சத்திற்கு வராத ஜனநாயக அழிவைப் பற்றிய விழிப்புணர்வை எனக்கு அளித்தமைக்கு நன்றிகள்.

அப்பப்பா! மாணவர் மன்றத் தேர்தல் குறித்த எத்துணை விஷயங்கள் வெறும் 7-10 நிமிட வாசிப்பில் கிடைத்துவிடுகிறது. நீட் போன்ற மாணவர்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களில் மாணவர் மன்றப் பிரதிநிதிகள் சட்டமியற்றும் இடங்களில் பங்கு பெற்றால் எப்படியிருக்கும் என்ற கனவு கண்முன் விரிந்தது!

அக்‌ஷயா  (boldandunderlined.by.akshaya)

சமூக அரசியல் பொருளாதாரம் குறித்து அடிப்படை கூட தெரியாதவர்களை நம்மை ஆள்பவர்களாக அமரவைத்திருக்கும் இச்சூழலில், கல்லூரிகளில் மாணவர் மன்றத் தேர்தல்கள் நடத்தவேண்டியது குறித்து வெளியாகியுள்ள தலையங்கம் காலத்தின் குரல்.

இந்திய அளவில் இடதுசாரி மாணவர் அமைப்புகள், பல்வேறு பிரச்சனைகள், போராட்டங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றனர். ஆனால், இடதுசாரி மாணவர் அமைப்புகள் பற்றி ஒரு வரி கூடச் சொல்லாமல் இத்தலையங்கம் கடக்கிறது. மாணவர் தேர்தல்களை மீட்க வேண்டும் என்ற நோக்கம் நியாயமானது. தரவுகள் அடிப்படையில், பல்வேறு கோணங்களையும் கொண்டிருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.