உதிரத் துளி
ஓவியம்: மணிவண்ணன்
ஆஷாட1 மாதத்தின் இரண்டு நாள் மழை மேகங்கள் மறைந்த பின்பும், வானம் முழுவதும் திறக்கவில்லை. பௌர்ணமி இரவு பாதி கடந்திருந்தது. சில சமயம் கருமேகங்கள் நிலவை மூடியிருந்தன. சில சமயம் கண்கள் பனிக்கும்படி, நிலவைப் பாதி மறைத்தன.
அது முழு அமைதி நிலவிய இரவு. பேச்சருக்குத் தூக்கம் வரவில்லை. ஆனால் அதுகுறித்த எந்தத் துயரமும் அவனுக்கு இல்லை. ஆனாலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அவன் வாழ்க்கையின் கணக்கை எண்ணத் தொடங்கியிருந்தான். அது அவனுக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது. மனம் அவனுடைய கட்டுப்பாட்டை இழந்திருந்தது. அவன் கவலைக்குள் மூழ்கத் தொடங்கினான்.
பேச்சர் யாருடைய வலையிலும் எளிதில் சிக்கிவிடக்கூடியவனோ அழுந்திவிடுபவனோ இல்லை. கொல்லனின் பட்டறையில் சுட்டெரிக்கும் வெப்பமும் இரும்பின
