“நான் அதுவல்ல; அவர்களும் அதுவல்ல”
இசை – நாட்டிய மரபுவழிக் கலைக் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர், ஆய்வாளர். குடும்ப வரலாறு, வாழ்வனுபவம், சமூக நினைவுகளிலிருந்து தொடங்கி சாதி, பாலினம், கலை, சமூக வரலாறு, பரதநாட்டியத்தின் மறுவடிவமைப்பு குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ (EPW) உள்ளிட்ட இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன; கல்வியியல் ஆய்வுகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். ஹரி கிருஷ்ணன், தேவேஷ் சோனேஜி ஆகியோருடன் இணைந்து ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட நூலிலும் அவரது பங்களிப்பு இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ‘தேவநாயகி’ என்ற முழுநாள் கருத்தரங்கும், அதனுடன் மீண்டும் எழுப்பப்பட்ட ‘தேவதாசி முறை’ குறித்த விவாதங்களுடன் எந்த வகையில் முரண்படுகிறீர்கள்?
‘தேவநாயகி’ கருத்தரங்கிற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். ஆனால் நான் அதில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம், அந்த நிகழ்வில் இருந்த சிலருடன் எனக்கு ஏற்கெனவே ஏற்பட்டிருந்த அனுபவங்கள். சில சந்தர்ப்பங்களி
