தலையங்கம்
ஆசிரியர் குழு

ஆரோக்கியமான ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு மக்களின் நேரடிப் பங்கேற்பு. நாட்டின் சட்டதிட்டங்கள், அரசின் கொள்கைகள், நிர்வாகத்தின் செயல்பாடுகள்மீது உடன்பாடில்லை எனில் அதனை அமைதியான முறையில் வெளிப்படுத்தவும் ஒன்றுசேரவும் போராடவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்குத் தெளிவான அடிப்படை உரிமைகளை வழங

கடிதங்கள்

‘மகளிர் நலத்திட்டம்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...’ என்ற தி. பரமேசுவரியின் கட்டுரை அருமை. அரசியல்வாதிகளின் திட்டங்களில் ஆணாதிக்கம் இருக்கிறதோ, இல்லையோ கட்டுரையில் கூறுவதுபோல் ஓட்டுத் தேவைக்காக அரசின் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்பதே உண்மை. அவரது கட்டுரையை உறுதிப்படுத்துவதுபோல்

எதிர்வினை

யோகபிரியா (yogapriya_yp) அக்டோபர் மாதத் தலையங்கம் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், மாணவர் மன்றத் தேர்தல்களை எவ்வாறு ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதையும், மாணவர் மன்றங்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அவை சமூகத்தில் எத்தகைய நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்த

பத்தி இன்றும் என்றும் 7
ராமச்சந்திர குஹா; தமிழில்: மருதன்

பிஸ்மில்லா கான்                                         ஷேக் சின்ன மௌலானா சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வுக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக லாகூருக்குச் சென்றிருந்தேன். அங்கே,

திரை: டோரதி
கனகா வரதன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படம், வணிகரீதியான வெற்றி தோல்விகளைத் தாண்டித் தமிழ்ப் பொதுத்தளத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் கிடைத்த அங்கீகாரம், இளையராஜாவின் பின்னணி இசை போன்றவற்றால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ப

அஞ்சலி: நானா பாடேகர் (1956-2026)
ஷாலினி பிரியதர்ஷினி

‘மரணம் ஒருவரைப் புனிதராக்கிவிடாது, திறமை நற்குணத்தின் சான்றாகாது, பிறருக்கு உதவுவதால் மட்டுமே ஒருவரை நல்லவர் என்று சொல்லிவிட முடியாது.’ நடிகர் நானா பாடேகரின் மரணத்தைத் தொடர்ந்து வெளியான பின்னணி பாடகர் சின்மயி ஸ்ரீபாதாவின் இந்தச் சமூக வலைதளப் பதிவு முக்கியமானது.  2018ஆம் ஆண்டு,

கதை
வைரவன் லெ.ரா.

ஓவியம்: நரசிம்ம பாலாஜி காலையில் அலுவலகத்திற்கு வந்தவுடனே உடன் பணிபுரிபவர் அன்றைக்கு அமாவாசை என்று சொல்லி, பிரசாதம் என்று சிறிய டப்பர்வேரில் இருந்த சர்க்கரைப் பாயசத்தை நீட்டினார். அன்றைக்கு ஆடி அமாவாசை என அம்மை நேற்று அழைத்தபோது சொன்னது ஓர்மைக்கு வந்தது. சென்னை வந்ததிலிருந்து எந்த ஆடி அமாவாசைக

பதிவு: காலச்சுவடு 300 - 30
சு. தீபிகா

சென்னை, பட்டாபிராம் தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரியின் தமிழ்த்துறையும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து 24.09.2026 அன்று ‘தலித் மற்றும் பெண் எழுத்து’ என்னும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரும் ஆய்வாளருமான ஸ

பதிவு
கிருஷ்ண பிரபு

சென்னை கவின்கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 2026, அக்டோபர் 3 அன்று அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் முயற்சியில் இந்நாள் மாணவர்களும் ஒன்றிணைந்து, ஓவியக் கல்லூரியின் வளாகத்திலேயே ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்; நிகழ்வு மாநாடுபோலக் கோலாகலமாக நடந்தேறியது. ந

கட்டுரை
நா. சந்திரசேகரன்

பியானோக் கலைஞரும் இசையியலாளருமான லுட்விக் குந்தேராவின் மகனான மிலன் குந்தேரா, தற்போதைய செக் குடியரசில் உள்ள பிர்னோவில் (ஏப்ரல் 1, 1929) பிறந்து வளர்ந்தவர். பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் (ஜூலை 11, 2023) இறந்தார். மிலன் ஆரம்பத்தில் இசை பயின்றார்; ஆனால் படிப்படியாக எழுத்துத் துறைக்குத் திரும்பினார். அ

களஞ்சியம்
ஸ்ரீநிவாச கோபாலன்

எழுத்தாளர்கள் இலக்கியத்துக்கு அப்பால் பிற துறைகளில் ஈடுபாடு கொள்ளும்போது அவர்களின் படைப்புகள் செழுமையடைகின்றன. தொல்லியலில் பட்டம் பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் ரோஜர் மார்ட்டின் தூ கார்ட், பழைய கையெழுத்துப் படிகளைச் சேகரித்துப் பாதுகாப்பதில் விருப்பமுடையவர். அதன் பிரதிபலிப்புதான் ‘தபால்காரன்&

மதிப்புரை
ஸ்டாலின் சரவணன்

கடவுளுக்குப் பின்  (சிறுகதைகள்) பொன்முகலி வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு,  நாகர்கோவில் - 1  பக். 112 ரூ.. 145 கனவுகள் இன்றி உறங்குவதற்கு ஏங்கியிருக்கிறேன். கனவுகள் இடையூறு செய்யும் இரவுகளில், மறுநாள் பகல் முழுவதும் சோர்வு இருக்கும். தூங்கி எழுந்த

கவிதைகள்
நாஸர் ரபா; தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

  பாலஸ்தீனக் கவிஞரும், நாவலாசிரியருமான நாஸர் ரபா 1963ஆம்  ஆண்டு காஸாவில் பிறந்தவர். விவசாய விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் விவசாய அமைச்சின் தொடர்பாடல் துறை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகளு

பாரதியியல்
ய. மணிகண்டன்

‘பாரத ஜன சபை’ என்பது இப்போது நமக்கு அந்நியமாகிவிட்டது. சொல்லாட்சியைக் குறிப்பிடுகிறேன்! இந்திய விடுதலைக்குப் போராடிய காங்கிரசைக் குறிக்கப் பாரதி பயன்படுத்திய சொல்லாட்சி இது! காங்கிரசில் ஒரு பிரிவாகச் செயல்பட்ட புதிய கட்சியாரின் அணியில் இருந்தவர் பாரதி. 1907இல் நடைபெற்ற 23ஆம் காங

கட்டுரை
ப. சகதேவன்

இடமிருந்து: ஜா. தீபா, பாலைவன லாந்தர், தமி்ழ் பொன்னி, ரேவா, ஜெயஸ்ரீ, சவிதா, அகிலா ஸ்ரீதர், காயத்ரி. ஆர் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் கணிகையர், தேவரடியார், பதியிலார், ரிஷப தளியார், தளிச்சேரியார், ருத்ர கணிகையர் போன்ற பெயர்கள் பல்வேறு காலகட்டங்களில் பேசப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இதனோடு சம்பந

நேர்காணல்: நிருத்யா பிள்ளை
நேர்கண்டவர்கள்: ஷாலினி பிரியதர்ஷினி, செந்தூரன், ஸ்ரீநி

இசை – நாட்டிய மரபுவழிக் கலைக் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர், ஆய்வாளர். குடும்ப வரலாறு, வாழ்வனுபவம், சமூக நினைவுகளிலிருந்து தொடங்கி சாதி, பாலினம், கலை, சமூக வரலாறு, பரதநாட்டியத்தின் மறுவடிவமைப்பு குறித்துத் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ (EPW) உள்ளிட

கதை
கவிதா முரளிதரன்

ஓவியம்: ரவி பேலட் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது அதற்காகவே காத்திருந்ததுபோல மழை தூறத் தொடங்கியது. வலுக்கக் கொஞ்ச நேரமாவது ஆகும். வழக்கமான தேநீர்க் கடையில் நின்றேன். என்னைப் பார்த்தவுடன் இஞ்சித் தேநீருக்கானஆயத்தங்களைச் செய்தபடியே சினேகமாகப் புன்னகைத்தார் விஜய் அண்ணன். &ldq

பத்தி: காணச் சொல்லுகிறேன்
இரா. ரேவதி

ஓவியம்: மு. மகேஷ்  அதிகாரம் 3 அலைச்சத்தம் கேட்டபடியே தயாராகிக் கொண்டிருந்த சேசடிமைக்கு, அன்று காலையிலிருந்தே மிகுந்த படபடப்பாக இருந்தது. வெள்ளை மணல் சூழ இருந்த அவன் வீட்டுக்கும் குளிமுறிக்குமாக நடந்தபடி இருந்தான். அம்மை கொடுத்த அவனுக்குப் பிடித்தமான கஞ்சியையும் நெத்திலிப்பொடியையும் சா

கதை
ஜயந்த் கத்ரி; குஜராத்தியிலிருந்து தமிழில்: குமரன்

ஓவியம்: மணிவண்ணன் ஆஷாட1 மாதத்தின் இரண்டு நாள் மழை மேகங்கள் மறைந்த பின்பும், வானம் முழுவதும் திறக்கவில்லை. பௌர்ணமி இரவு பாதி கடந்திருந்தது. சில சமயம் கருமேகங்கள் நிலவை மூடியிருந்தன. சில சமயம் கண்கள் பனிக்கும்படி, நிலவைப் பாதி மறைத்தன. அது முழு அமைதி நிலவிய இரவு. பேச்சருக்குத் தூக்கம் வரவில்

உள்ளடக்கம்