நீலம்
ஓவியம்: ரவி பேலட்
நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது அதற்காகவே காத்திருந்ததுபோல மழை தூறத் தொடங்கியது. வலுக்கக் கொஞ்ச நேரமாவது ஆகும். வழக்கமான தேநீர்க் கடையில் நின்றேன். என்னைப் பார்த்தவுடன் இஞ்சித் தேநீருக்கானஆயத்தங்களைச் செய்தபடியே சினேகமாகப் புன்னகைத்தார் விஜய் அண்ணன். “அண்ணன் வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க போலிருக்கு,” என்றார் புன்னகை நீங்காமல். “எங்க வீட்டுக்கா? இப்போ போய் யாரு வருவாங்க,” என்று பதில் சொன்னேன். “இல்லண்ணே, பார்த்தேனே. ஒரு அம்மாவும் ரெண்டு குழந்தைகளும் போனாங்க. ஒரு அரை மணிநேரம் இருக்கும். உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்,” என்றார். எனக்குப் புதிராயிருந்தது. தேநீர்க் கடை தாண்டி இடதுபுறம் திரும்பினால் தெரு முடியும் இடத்தில் சாலையைப் பார்த்தவாறு எனது
