பாலஸ்தீனக் கவிதைகள்

பாலஸ்தீனக் கவிஞரும், நாவலாசிரியருமான நாஸர் ரபா 1963ஆம் ஆண்டு காஸாவில் பிறந்தவர். விவசாய விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள இவர் விவசாய அமைச்சின் தொடர்பாடல் துறை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன எழுத்தாளர்கள் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இவரது ஐந்து கவிதைத் தொகுப்புகளும், இரண்டு நாவல்களும் இதுவரை வெளிவந்துள்ளன. போர்க் கால இன்னல்களைத் தமது படைப்புகளில் எழுதும் இவர் போருக்கு மத்தியிலும் காஸாவில் வசித்துவருகிறார்.
1
யாருக்காக நாங்கள் பிரார்த்திக்க வேண்டும் இந்நேரத்தில்?
நண்பர்களென அழைக்க
இறந்தவர்களை மாத்திரமே விட்டுவைத்திருக்கிறது
யுத்தம்
எனக்கு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும் இரவுகளில்
ஒரு கனவினைப் போல<b
