காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்
ஓர் இளம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. ராகுல் காந்திக்கு ஐந்து அறிவுரைகள் கூற முடியுமா என்றார். பிரியங்கா காந்தி மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடக் கூடாது. அதை மட்டும் செய்தால் போதும் என்றேன். ஆனால் அது நிச்சயம் புறக்கணிக்கப்படும் என்று எனக்குத் தெரியும்.
‘பாரத் ஜோடோ யாத்ரா’ ராகுல் காந்திமீதான நம்பகத்தன்மையை அதிகரித்ததோடு அவரை மக்களில் ஒருவராகவும் வெளிப்படுத்தியது. ஆனால் ஒரு குடும்ப அமைப்பாக மீண்டும் தன்னை நிறுவிக்கொண்டதன் மூலம் நடைபயணத்தினால் கிடைத்த அனைத்து நன்மைகளையும் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகு இழந்துவிட்டது. பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் வென்றார் (அமித் ஷாவுக்குக் காந்தி நகர் எப்படியோ அப்படி இவருக்கு வயநாடு பாதுகாப்பானது). தான் தென்னிந்தியாவையும் தனது அண்ணன் வட இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவன் மூலம் இருவரும் இணைந்து இந்தியாவை ஒண்றிணைப்பதாக அவர் பெருமிதம் கொண்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் தலைமைப் பேச்சாளர
